பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 87 மோனாலிஸா புன்னகை தவழ நடந்த மோகினிக்கு, திருமணத்தைவிட, திருமணத்திற்கு அவன் குடும்பத் தினரைச் சம்மதிக்க வைப்பது தன் திறமைக்கும் சுய மரியா தைக்கும் ஒரு பரீட்சையாக நினைத்து நடந்தாள். அந்தப் பரீட்சை எப்படி இருக்கும் என்பதற்குக் கட்டியங் கூறுவதுபோல், சந்திரன், அக்கினிப் பிழம்பாக, வித்தியாச மான தோற்றத்தில் தோன்றியது. 2 அந்தக் கார் வாசலுக்கு முன்னால் வந்தபிறகும் அங்கே நிற்க வேண்டுமென்ற அனுமானத்துடன், இருபதடி துாரத் துக்கு முன்னதாகவே சீனிவாசன் பிரேக் மீது காலை அட்டை மாதிரி உதைத்துக்கொண்டு ஒட்டி வைத்திருந்தாலும், அது என்னமோ. வாசலுக்கு அப்பால் பதினைந்தடிவரை நொண்டியடித்துக்கொண்டு நின்றது. அதுவரை அவனை யும், அவனது . இவளையும் எதிர்பார்த்து வீட்டுக் குள்ளேயே நின்றுகொண்டிருந்தவர்கள், கார் நிற்பதைப் பார்த்ததும் வாசலுக்கு வந்தார்கள். பின் வீட்டில் இந்ந்து இறங்கிய மோகினி தோளோடு சேர்ந்து முழங்கைகள் வரை சேலையை இழுத்துவிட்டுக் கொண்டபோது வீட்டு வராந்தாவில் நின்ற கனகம்மாள், பையனின் வருங்கால மனைவியை இம்ப்ரஸ் செய்ய நினைத் தவள்போல் தன் புடவைத் தலைப்பை முழங்கைக்கு அப்பாலும் கொண்டு வர முயற்சித்து, அது முடியாமல் போகவே கைகளைப் புடவைக்குள் மடக்கிக்கொண்டாள். கல்லூரிக்காரன் சபாபதி, வழக்கத்திற்கு விரோதமாக சட்டைப் பொத்தான்களை மாட்டிக்கொண்டதுடன், டைட்