பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சு. சமுத்திரம் பேண்ட் போடாமல் லுங்கி கட்டிக்கொண்டதற்காகச் சங்கடப்பட்டவன்போல், லுங்கியைக் கிழிக்கப்போறவன் போல் அதைத் தொடையில் அழுந்தத் தேய்த்தான். பி.யூ. ஸி. க்காரியான உஷா, காரிலிருந்து இறங்கியவளை வரவேற்பதுபோல், ஒரு புன்னகையை உலவ விட்டாள். கல்லூரியில் சமூக சேவை அணியில் உள்ள அவளுக்கு காரண மில்லாமல் புன்னகை செய்வது பழகிப்போனதால், இப் பொழுது காரணத்தோடு புன்னகை செய்வது எளிதாக இருந்தது. பி.எஸ் ஸி. முடித்துவிட்டு, தனக்கு எ. எஸ்.ஸி. படிக்க இடம் கிடைக்காததால் உலகில் அணுவாயுதப் போர் நடந்தாலும் அதை வ ர வே ற் க த் துடிப்பவள்போல் தோன்றிய கமலா, முகத்தைத் தூக்கிவிட்டு பின்னால் அதை இறக்கிக்கொண்டாள். இதுதான் அவளின் உயர்ந்தபட்ச வரவேற்பு. மோகினி, அளவான இடைவெளியில் அழகு குலுங்க நடந்துபோய், சீனிவாசன் அவளுக்கு இணையாக நடக்க விரும்பி, நடக்கமுடியாமல் முன்னால் போயும், பின்னால் கால்களை நகர்த்தி அவளுக்கு ஏற்றாற்போல் அட்ஜஸ்ட்" செய்து கொண்டும் நடந்தான். வீட்டுக்குரியவர்கள் அனை வரும் அந்த ஜோடியை அளவெடுத்துக் கொண்டிருந்தாக்கள்.

  • இந்த அண்ணா சரியான விளக்கெண்ணெய். அவளை மாதிரிதான் அழகா இருக்க முடியாது: டிரஸ்ஸாவது ஒழுங்கா போட்டிருக்கலாம். இவனும் இவன் தொளதொள பேண்டும், சகிக்கல” என்று சகிக்க முடியாமல் உஷா சபாபதி யின் காதை மைக் மாதிரி நினைத்துக்கொண்டு பேசிக் கொண்டே போனாள்.

என் பையன் நிறத்துக்கு இவள் கொஞ்சம் மட்டமின் னாலும் பரவாயில்லை. இவனுக்குன்னு பிறந்தவள் மாதிரியே இருக்காளே என்று பொன்குஞ்சைப் பெற்ற கனகம் பெருமைப்பட்டுக் கொண்டாள். சிறிது இன்டிபரன் டாக இருந்த கமலா கூட மோகினியைப் பார்த்ததும் தாற்காலிகமாக எம். எஸ். ஸியை மறந்தாள்.