பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VIII

கனமில்லாததால், வழியில் பயமின்றி நடக்கிறேன். இவ்வளவு பத்திரிகைகள், முதலாளிகள், அரசியல்வாதிகள், உதிரிகள் உட்பட பலர் தாக்கியும், நான் விழுந்து விடாமல் இருந்ததற்குக் காரணங்கள் -

என் மனச்சாட்சி. நான் தப்புச் செய்யவே மாட்டேன் என்று நிச்சயமாக நம்பி, எனக்கு ஆதரவு காட்டிய "தீக்கதிர்" - "செம்மலர்."

அரவணைத்துக் கொண்ட,"தாய்.”

நடுநிலை பிறழாது என் கட்சிக்கும் வாய்ப்புத் தந்த "குங்குமம்", "மாலைமுரசு."

வஞ்சகக் கூட்டத்திடம் வம்படி பட்டபோதெல்லாம், எனக்கு உற்சாகமும், ஊக்கமும் வழங்கிய என் துணைவி திருமதி கோகிலா சமுத்திரம்.

"நாங்கள் இருக்கிறோம். கவலைப்படாதீர்கள்” என்று கடிதங்கள் எழுதிய பாட்டாளி வர்க்கத் தோழர்கள், குறிப்பாக பெரியவர் முத்தையா, வழக்கறிஞர்கள் ச. செந்தில்நாதன், ஜெயராமன், பரமசிவம்.

'அண்ணாச்சி... நம்மை மாதிரி ஆட்கள் இதை தாங்கிக் கொண்டால்தான் தாக்குப் பிடிக்க முடியும்” என்று ஆறுதல் தந்த சிந்தனையாளர் வலம்புரி ஜான்.”

என் நேர்மையை சந்தேகிக்காத நிலைய இயக்குநர் திரு. சவ்டேக்கர், துணை இயக்குநர் திரு. குன்னி கிருஷ்ணன், உதவி இயக்குநர் திரு. மகாதேவன் ஆகியோர்.

ஒரு கட்டத்தில் என் விளக்கத்தையும் போட வேண்டியது பத்திரிகை தர்மம் என்பதை உணர்ந்த ஒரு சில பின்புத்தி செய்தி நிறுவனங்கள் - பத்திரிகைகள்.

ஏதோ என்னைப் பற்றிய பிரதாயங்களை நான் சொல்வதாக நினைக்கக்கூடாது. இவற்றிற்கும், இன்றைய சமூக அமைப்பிற்கும் சம்பந்தம் இருப்பதால் இவற்றைச் சொல்ல வேண்டியதாயிற்று. இந்த இரண்டின் கூடலில் பிறந்ததுதான் இந்த நாவல். ஆனாலும் -

இந்த நாவலை, தனி மனிதக் கண்ணோட்டத்தோடு நான் எழுதவில்லை."அனுபவம் என்பது ஒரு சாளரம். அதன் மூலம்தெருவைப் பார்க்கலாம், ஆனால் அதுவே தெருவாகாது" என்ற முக்கால் உண்மையையும், "அனுபவம் முக்கியமல்ல, அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதே முக்கியம்' என்ற வியோ டால்ஸ்டாயின் அறிவுரையையும் மனதில் நிறுத்தி, நான் சந்தித்த மெய்யான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/10&oldid=558612" இலிருந்து மீள்விக்கப்பட்டது