பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தையாவும், மேகலாவும் எழும்பூரில் உள்ள மெட்ரோபாலிட்டன் கோர்ட்டுக்களை விழுங்கிக் கொண்டிருந்த அந்தக் காலத்து கட்டிட காம்பவுண்டிற்குள் வந்து சேர்ந்தார்கள்.

எப்போதாவது பஸ்ஸில் போகும்போது, அந்தக் கட்டிடங்கள் தொகுப்பை, சம்பந்தம் இல்லாதபடி வெளிப்புறமாய் பார்த்தவர்கள், இப்போது முதன் முதலாய் உள்முகமாய் பார்த்தார்கள். மேகலா, அப்பாவைத் தேடினாள். வந்திருக்கமாட்டார். இப்போ, மணி பிற்பகல் ஒன்று. ஒன்றரை மணியளவில்தான் வக்கீலுடன் வருவதாகச் சொன்னார்.

திறந்தவெளி சிறைச்சாலைபோல் தோன்றிய அந்தக் கட்டிடக் குவியலுக்குள், மனிதர்கள், சிதறிப் போனவர்களாய் சிந்திக் கிடந்தார்கள். ஒருசில இடங்களில், குப்பத்துப் பெண்கள் நான்கைந்து பேராய், தலையில் கை வைத்து, துக்கம் தொண்டையைத் தாண்டக்கூடாது என்பதுபோல் வாயில் விரல்வைத்து எங்கேயோ வெறித்து நோக்கினார்கள். இதே ரகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தத்தம் ஏரியா போலீஸ்காரர்களின் பேச்சை வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கு கருப்பு அங்கி வக்கீல்கள், கும்பல் கும்பலாய் அந்தத் தரையில் முளைத்த புதிய பீடபூமிகள் போல் திட்டுத்திட்டாய் நின்றார்கள். ஒயிட்காலர்கள் எனப்படும் கலர்ச் சட்டைகள், ஆடை கசிந்த ஆசாமிகளை உருட்டிக் கொண்டிருக்க, ஒவ்வொரு மெட்ரோபாலிட்டன் கோர்ட் வாசலிலும் கூன்போட்ட கிழவிகள், சைக்கிள் ரிக்ஷாக்களை ஒட்டி ஒட்டி உள்ளங் கைகளையே புறங்கைகளாக்கிய தொழிலாளர்கள், வறுமைக்கு ஈடுகட்டுவதுபோல் - ஆடைக்கு முரண்காட்டுவதுபோல் மேனியில் வளம் கொஞ்சும் இளம் பெண்கள் - இப்படி மனிதக் கும்பல்கள், நீதி கேட்டோ, நீதியால் கேட்கப்பட்டோ அல்லது கெட்டோ, அங்கே கண்களே கர்மமாய் ஆனதுபோல் தவம் கிடந்தார்கள்.

அப்படியும், இப்படியுமாய் ஒன்றே முக்கால் மணிக்குப் பேராசிரியர் பெருமாள்சாமி, ஒர் இளம் வக்கீலுடன் ஆட்டோ ரிக்ஷாவில் வந்து இறங்கினார். பேராசிரியர் மகளை நோக்கியும், மகள் தந்தையை நோக்கியும் நடந்தபோது, அந்த வக்கீல், கையில் பல கேஸ்கட்டுக் களுடன், ஒரு கோர்ட் கட்டிடத்திற்குள் ஒடினார். பேராசிரியர், மகளையும், மாணவனையும் வறட்சியாகப் பார்த்தார். அவரிடம் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காகப் பேசப்போன முத்தையா, பேராசிரியரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/104&oldid=558712" இலிருந்து மீள்விக்கப்பட்டது