பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 94.

முத்தையா, கண்களைக் கசித்துக் கொண்டான். கையை, முகத்தில் துடைத்து ஈரமாக்கிக் கொண்டான். மேகலா, தந்தையை ஆறுதலாகப் பார்த்து, தனக்கு ஆறுதலாக முத்தையாவையும் பார்த்தாள்.

பிற்பகல் இரண்டு மணிக்கு, மெட்ரோபாலிட்டனின் குறிப்பிட்ட அந்த கோர்ட் கூடியது. நீதிக்கு இடம் கொடுத்த அந்த அறையைப் பார்த்தாலே எரிச்சல், பீதி முதலிய உணர்வுகள் கலவையாக வரும். அப்படிப்பட்ட அறை. இந்தக் காலத்தில் உருப்படியில்லாத ஒரு ஊர்ப் பஞ்சாயத்து அதிகாரிக்குக் கூட புஷ்டோர் கொண்ட வாசலும், டிஸ்டெம்பர் சுவர்களும், கார்பெட் தரையும், சன்மைக்கா மேஜையும் கொண்ட அலுவலக அறை உண்டு. ஆனால், ஆயிரக்கணக்கான மக்களிடையே நீதித்தராசை நிமிர்த்திக் காட்டுவதற்குக் களம்கொண்ட அந்தத் தளம் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தின் வகுப்பறையில் பாதியளவு பரப்போடும், அதைவிட இரண்டு பங்கு சேதத்தோடும் இருந்தது. நீதிபதி அமர்வதற்காக ஒரு சின்ன மேடை அதன்மேல் பெரிய - அதேசமயம் பழைய மேஜை அதற்குப் பின்னால் திரைச்சீலை. நீளவாக்கிலான மேடைக்குக் கீழே, இரண்டு பெஞ்சுகள். மத்தியில் மேஜைகள்.

பெஞ்சு முனைகளை ஒட்டி குறுக்காகப் போடப்பட்ட இன்னொரு மேஜை, அதற்குப் பின்னால் பெஞ்சு கிளார்க்கின் நாற்காலி, இன்னொரு முனையில் கூண்டு. இதுதான் அந்த கோர்ட்டு.

வக்கீல் இளைஞர், பேராசிரியர் பெருமாள்சாமியை முதலில் வழக்கறிஞர்கள் அமரும் நாற்காலியில் உட்காரும்படி சைகை செய்தார். அவரும் தயங்கித் தயங்கி, மயங்கி மயங்கி உட்கார்ந்தார். வெளியே வராண்டாவில் திரண்டு நின்ற குற்றவாளிகளுடன் மேகலாவும் முத்தையாவும் நின்றார்கள். ஒருவரை ஒருவர் பார்க்காமல், பார்வையை அகற்றிக் கொண்டார்கள். இதற்குள் வெளியே இருந்து வழக்கறிஞர்கள் வந்து, உட்கார இடம் இல்லாமல் நின்றபோது, வக்கீல் இளைஞர், பேராசிரியரைப் பார்த்து முகத்தை ஆட்டினார். அதைப் புரிந்து கொண்டவர்போல், அவரும் மெள்ள எழுந்து, வேகமாய் நடந்து, 'வராண்டா ஏழை பாளைகள் பக்கம் நின்று கொண்டார். அந்தக் காலத்தில் வகுப்புக்கு லேட்டாக வரும் மாணவர்களை, தாம் வெளியே நிறுத்தி வைத்திருந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. இப்போது, தன்னைத்தானே வெளியேற்றிக்கொண்ட வெறுமையில், துடித்துப் போனார்.

மாஜிஸ்திரேட் வந்துவிட்டார். வழக்கறிஞர்கள் எழுந்தார்கள். அவர்களின் கட்சிக்காரர்கள் முண்டியடித்தார்கள். சலனமற்ற முகத்தோடு, எவரையும் நோக்காத பார்வையோடு நாற்காலியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/106&oldid=558714" இலிருந்து மீள்விக்கப்பட்டது