பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 * சத்திய ஆவேசம்

அமர்ந்த நீதிபதி, மேஜையை அங்குமிங்குமாய் பார்த்தபோது, பெஞ்சு கிளார்க் கேஸ் கட்டுக்களை நீட்டினார். பிறகு, மாஜிஸ்டிரேட்டிடம் பணிவன்பாய் பேசிவிட்டு, முனுசாமி. முனுசாமி. என்றார். உடனே, டவாலி போட்டவர், வராண்டா பக்கம் வந்து பெஞ்சு கிளார்க்கின் ஒலி பெருக்கியானார். முனுசாமி வந்தான். அங்கே நின்ற சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்தபடியே வந்தான். குற்றத்தை உடனடியாக ஒப்புக் கொண்டான். இருபத்தைந்து ரூபாய் அபராதம். அபராதத் தொகையை எப்படிக் கட்டவேண்டும் என்பதை அறிவதற்காக, அதை அறிந்து வைத்திருந்த போலீஸாரிடம் போனான். முத்தம்மா, முனியாண்டி, ரங்கன், சீனன்-இப்படிப் பலர், தனித்தனியாகவும், கோஷ்டி கோஷ்டியாகவும் கோர்ட்டிற்குள் நுழைந்து நுழைந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

பேராசிரியர், கூனிக்குறுகி கோர்ட்டிற்குள் போனார். சிறிது நேரத்தில் அவர் பெயர் வழக்கு எண்ணோடும், பிரதிவாதியின் பெயரோடும் ஏலம் போடப்பட்டபோது, வக்கீல் இளைஞர் சுட்டிகாட்டிய மரக்கூண்டில் ஏறினார். நிற்பதற்கும், மயங்கி விழுவதற்கும் வசதியான கூண்டு பேராசிரியரிடம், ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டு, சத்தியப் பிரமாணம் வாங்கப்பட்டது. மாஜிஸ்டிரேட், அவர், தனது புகாரை எடுத்துரைக்கலாம் என்பது போல நிமிர்ந்து உட்கார்ந்தார்.

பேராசிரியர், தொண்டைக்கு வாய்மூலம் ஈரம் பாய்ச்சிக் கொண்டார். மனதைப் போல், சட்டையை இழுத்து விட்டுக் கொண்டார். கண்களை மூடி வாயைத் திறந்தார்:

"எனக்குச் சொந்த ஊர் திருச்சில ஒரு கிராமம். திருச்சில பி.ஏ. படிச்சுட்டு, சென்னையில பிரஸிடென்ஸி காலேஜ்ல எம்.ஏ. படிச்சேன்:

வக்கீல் குறுக்கிட்டார். "நிதானமாய் ஸ்லோவாய் பேகங்க. அய்யாவே எழுதணும் பாருங்க.."

புகார் மனுவில், தான் சொல்வதை எழுதிக் கொண்டிருந்த மாஜிஸ்டிரேட்டைப் பார்த்துவிட்டு, பேராசிரியர் தொடர்ந்தார்:

"எம்.ஏ.வுல எகனாமிக்ஸ் எடுத்தேன். யுனிவர்ஸிட்டியில கோல்ட் மெடல் வாங்கினேன். பிரஸிடென்ஸி காலேஜ்ல இப்போகூட என் பெயர் இருக்கு. என்ன போதாத காலமோ, செகரட்டேரியட்ல வேலையில சேர்ந்தேன். ஒரு வருஷத்துக்கு மேல தாக்குப்பிடிக்க முடியல. அப்புறம் ஐ.ஏ.எஸ். எழுதுனேன். இன்டர்வியூவுல பெயிலாட்டேன். எந்த வேலையும் கிடைக்கா விட்டால், ஒருவன் எந்த வேலையில் சேருவானோ, அந்த வேலையில சேர்ந்தேன். அதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/107&oldid=558715" இலிருந்து மீள்விக்கப்பட்டது