பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 98

வாத்தியார் வேலை. இதே இந்த காலேஜ்ல, டியூட்டராய் சேர்ந்தேன். ஐந்து வருஷத்துல லெக்ஸராய் மாறினேன். அப்புறம் பத்து வருஷத்துல புரபஸர். அப்புறம் ஹெட் ஆப் தி டிபார்ட்மென்ட். அப்புறம் வைஸ் பிரின்ஸ்பால், பேருதான் வைஸ் பிரின்ஸ்பால்; அது சம்பந்தமாய் எந்தப் பொறுப்பும் எனக்குக் கொடுக்கல. நானும் கேட்கல. அதனாலதானோ என்னவோ, பழைய பிரின்ஸ்பால் ரிட்டயர் ஆனதும் என்னை ஆக்டிங் பிரின்ஸ்பாலாய் போட்டாங்க"

மாஜிஸ்ரிரேட், எழுதிய கையை வாயருகே கொண்டுவந்து இருமினார். பிறகு நிதானமாக அவர் பேனாவை தொட்டபோது -

"அப்போ, டிரஸ்ட்போர்ட் சேர்மன் துண்டுதலில் என் மாணவச் செல்வங்களை, நானே கல்லூரியில் இருந்து வெளியேற்றி, அப்புறம் மனம் திருந்தி மீண்டும் சேர்த்துக்கிட்டேன். பொதுவாய் பாடம் நடத்துறதில எபிஷியன்டுன்னு எனக்குப் பேரு. பல்கலைக்கழக வட்டாரத்துல, நல்ல பேரு வாங்குனவன். வாடிக்கையில் இந்தக் கேவலமான செய்தி வந்தபிறகு எனக்கு நிம்மதி போயிட்டு. என் ஒரே மகளும் துக்கத்தை வாங்கி தூக்கத்தை விட்டுட்டாள். நேர்மையை உயிராய் நேசிக்கிற எனக்கு இப்போ உயிர் வாழ்வதே அவசியமின்றித் தெரியுது. ஆனாலும், இந்த எழுத்து முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுறதுன்னு தீர்மானிச்சுடன். அதோட. என் வேலையும் குந்தகப்பட்டு, என் மானமும் குந்தகப்பட்டு, நிர்க்கதியாய், நிராயுதபாணியாய் நிற்கிறேன். மாண்புமிகு மாஜிஸ்டிரேட் அய்யா அவர்கள் தான் எனக்குப் பரிகாரம் தேடித் தரணும்."

பேராசிரியர். பெருமாள்சாமி கூண்டிலிருந்து விடுபட்டார். மாஜிஸ்டிரேட் தான் எழுதியதை, பெஞ்சு கிளார்க்கிடம் கொடுக்க, அவர் பேராசிரியடமிருந்து, அதில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். எதுவும் புரியாமல் பேராசிரியர் வெளியே வந்தபோது, வக்கீல் இளைஞர் ஓடிவந்து, “கன்கிராஜுலேஷன். அடுத்த மாசம் 15-ஆம் தேதி வாய்தா என்று சொன்னபடியே ஆனந்த வேகத்தில் ஒடினார். முத்தையா-மேகலா சகிதமாக, பேராசிரியர் வெளியே வந்து, ஒரு புளிய மரத்தருகே அக்கினிப் பிரவேசம் செய்து வெந்து போனவர்போல், வாயால் ஊதிக் கொண்டிருந்தார். கால்மணி நேரத்தில் வக்கீல், இன்னொருவருடன் ஓடிவந்தார்.

“ஸார். இவர்தான் குயிக்கா நம்பா போட்டார். ஒரு பத்து ருடாய் கொடுங்க."

"கோர்ட் பீஸா..?"

"அதெல்லம் கேட்கப்படாது. சொன்னதைத் செய்யுங்க.."

"என்கிட்ட சில்லறையாய் இல்லியே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/108&oldid=558716" இலிருந்து மீள்விக்கப்பட்டது