பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 * சத்திய ஆவேசம்

பேராசிரியர், பையில் இருந்து ஒரு முழு இருபது ருபாய் நோட்டை மெல்லிதாய் பிடித்தபடி அதை மேலும் கீழுமாய் பார்த்தபோது, நம்பர் கிளார்க், அதை, வன்முறையாகப் பறித்துக் கொண்டு, எனக்குப் பத்து, அவருக்கு பத்து. அப்புறம். அடுத்த வாரம் வாங்க. நோட்டீஸ் இஷ்ஷல் பண்ணுவோம்." என்று வக்கீலிடம் சொல்லிவிட்டு ஒடிவிட்டார்.

பேராசிரியர். தனது நிராயுதபாணி சட்டைப் பையையே பார்த்தார். வைத்திருந்ததே முப்பது ரூபாய். ஆட்டோவுக்கு பத்து போயிட்டு. இப்போ இருந்த இருபதையும் எடுத்துட்டுப் போயிட்டான். திரும்பிப் போறது எப்படி? யோசிக்க யோசிக்க. அவருக்குக் கோபம் வந்தது. கத்தினார் என்பது லேசான மதிப்பீடு.

"என்னப்பா இது. அநியாயமாய் இருக்கே? அவனுக்கு எதுக்குப்பா அழனும்.?

"ஸார். நம்மோட லட்சியம் கேஸ்ல ஜெயிக்கனும் என்கிறது, அதுக்காக சில்லறை விஷயங்களை கவனிக்கப்படாது."

"அது ஒங்களோட லட்சியமாய் இருக்கலாம் என்னோட லட்சியம், சில்லறைத்தனமான லட்சியம் இல்ல. நேர்மை என்கிறது பணம் வாங்குறதுல மட்டும் இல்ல, கொடுக்கிறதுலயும் இருக்கு. அதோட அவன் இருபது ருபாயை எடுத்துக்கிட்டு போற விதமே அடாவடியாய் இருக்கு எங்க டிரஸ்ட் போர்ட் சேர்மன் அப்பாவு பார்ப்பானே ஒரு பார்வை, அப்படி என்னை கூலிக்காரன் மாதிரி பார்த்துட்டுப் போறான். இவன் செய்திருக்கிற காரியம், அந்தப் பத்திரிகைக்காரன் செய்த காரியத்தை விட மோசம் நீதியை நிலைநாட்ட எதுக்குய்யா அநீதி? எனக்கு வழக்கும் வேண்டாம், உழக்கும் வேண்டாம். இப்பவே மாஜிஸ்டிரேட் அய்யாகிட்ட நடந்ததைத் சொல்லப்போறேன். விடுங்கய்யா என்னை. காலேஜ்ல அட்மிஷனுக்குப் பணம் வாங்காதவன் நான். ஒரு சுண்டைக்காய் பயல், நம்பர் போட்டதுக்காக. விடுய்யா, என்னை:

பேராசிரியர், முண்டியடிக்கப் போனார். முத்தையாவும் மேகலாவும், குற்றவாளியை இரண்டு பக்கமும் நின்று போலீஸ் காரர்கள் பிடிப்பதுபோல், அவரைப் பிடித்துக் கொண்டார்கள். வக்கீல் இளைஞர், அவரை மறிப்பதுபோல் நின்றுகொண்டு, பேராசிரியரை இப்போதுதான், ஆச்சரியமாகப் பார்த்தார். அவருள், சத்ய தரிசனத்தைக் கண்டது போன்ற ஒரு திருப்தி அல்லது அதிப்ருதி.

வக்கீல் இளைஞர், தனது கட்சிக்காரர் பெருமாள்சாமியை, நீதியின் கட்சிக்காரராய் நினைத்து பழுதடைந்த குரலில், பாழடைந்த லட்சியப் பாதையின் சூட்சுமங்களை ஒப்பித்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/109&oldid=558717" இலிருந்து மீள்விக்கப்பட்டது