பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IX

மனிதர்களையும், கற்பனையான கேரக்டர்களாக அனுமானித்து, பெருமளவு விருப்பு வெறுப்பை ஒதுக்கி, இந்த சமூக அமைப்பை, என் அனுபவத்திற்கு ஏற்ப வியாக்கியானம் செய்யாமல், அனுபவத்தை, சமூக அமைப்பில் புடம்போட்டு, நாவலாக்கி உள்ளேன்.

இந்த நாவலின் முதல் நான்கு அத்தியாயங்கள், பிரபல வழக்கறிஞரும், என்னோடு தோளோடு தோளாய் நிற்பவருமான என் கல்லூரி காலத் தோழர், வழக்கறிஞர் ச. செந்தில்நாதனை ஆசிரியராகக் கொண்ட"சிகரத்தில் வெளிவந்தன.நல்ல பத்திரிகைகளுக்கு காலமில்லாத காலமிது என்பதால் சிகரம் நின்று போனது. நாவலும் நிற்கப் போனது. இந்தச்சமயத்தில், இதுமேல் உலாவர,'செம்மலர் ஆசிரியரும், முற்போக்கு எழுத்தாளர்சங்கப்பொதுச்செயலாளருமான திரு.கே.முத்தையா அவர்கள் அச்சு ரதம் கொடுத்தார். சத்திய ஆவேசத்தை பிரகளிப்பதில் பெருமைப் படுகிறோம் என்று எழுதினார். அவரது பெருந்தன்மையை, எனது மூலதனமாக்கி, பத்திரிகை காகித விலையையும் கருத்திற்கொள்ளாமல், பக்கம் பக்கமாய் எழுதிக் குவித்தேன்.

செம்மலர் தவிர வேறு எந்தப்பத்திரிகையிலும், இந்த அளவிற்கு பெரியதாய், இந்த அளவிற்கு சுதந்திரமாய் எழுதியிருக்க முடியாது, முடியவே முடியாது. அதிலும், தொடர்கதைக்கு எதிர் பார்க்கப்படுகிற சஸ்பென்ஸ் எனப்படும் துக்கிரித்தனங்களை விரும்பாத செம்மலர், என் தொடரை விரும்பிப் போட்டது, என் தகுதிக்கு அதிகமாகக் கிடைத்த அங்கீகாரம். அணிந்துரை கொடுத்த திரு.கே.முத்தையா அவர்களுக்கும், நானே திரும்பப் படிக்கச் சிரமப்படும் என் எழுத்துக்களை பிழையின்றி அச்சுக்கோர்த்த செம்மலர் தோழர்களுக்கும், அவ்வப்போது கடிதங்கள் எழுதிய எண்ணற்ற தோழர்களுக்கும், அத்தியாயம் தோறும் என்னோடு தொடர்பு கொண்டு ஊக்கப்படுத்திய செம்மலர் உதவி ஆசிரியர் திரு. வரதராசனுக்கும் என் நன்றி.

ஒரு அத்தியாயத்திற்குப் பிறகு அடுத்த அத்தியாயத்தில் என்ன எழுதலாம் என்று நான் மூளையைக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று பெரியமனது செய்து, என் மீது, மனுக்கள் மூலமும், செய்திகள் மூலமும் தாக்குதல்கள் தொடுத்து, அந்த தாக்குதல்களையே, நான் அத்தியாயங்களாக்க எனக்கு உதவிய பகை நண்பர்களுக்கு என் நன்றி. என்னை வீழ்த்துவதில் வெற்றி பெறாத அந்த நட்புப் பகைவர்கள், இந்த நாவல் உருவாவதில் வெற்றி பெற்றனர். பின் குறிப்பு :

18 ஆண்டுகளுக்குமுன்பு:எழுதப்பட்டமுழுமையான முன்னுரையை அப்படியே பிரகரித்துவிட்டு, குறிப்பை மட்டும் இப்போது எழுதுகிறேன். 1983-ஆம் ஆண்டில் சிகரத்தில் நான்கு அத்தியாயங்களாகவும், பின்னர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/11&oldid=558613" இலிருந்து மீள்விக்கப்பட்டது