பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 98

"நானும் காலேஜ்ல சில்வர் மெடலிஸ்ட் ஸார். சமூகத்தோட துயரங்களை என்னளவுல போக்கனும் என்கிற லட்சியத்துலதான் லா காலேஜ்ல சேர்ந்தேன் ஸார். கேர்ல்ஸ் பார்த்து, மத்தவங்க மாதிரி விசிலடிக்காமலே படிச்சவன் ஸார். கோர்ட்ல ஏழைபாளைகளுக்கு உதவப் போகிறோம் என்கிற மனிதாபினமான பெருமிதத்தோட, நான் பிராக்டீஸை துவக்குனேன். ஆனால், இங்கே வந்த பிறகுதான் புரிஞ்சுக்கிட்டேன் ஸார். பெஞ்ச் கிளார்க்கில இருந்து பெஞ்சைத் துக்கிப் போடுற பியூன் வரைக்கும் பணத்தைத் தள்ளாமல் பேப்பரைத் தள்ளமுடியாது. மாஜிஸ்டிரேட்டைக்கூட ஒரு வக்கீல் பகைச்சுக்கலாம்: ஹைகோர்ட்ல அவரை எதிர்த்து ரிவிஷன் பெட்டிஷன் போடலம். ஆனால், பெஞ்சு கிளார்க்குகளையோ, நம்பர் கிளார்க்குகளையோ, வக்கீல்களால் பகைக்கா முடியாது. எங்களுக்கு எஜமான்களே இவங்கதான் ஸார். இப்போ நீங்க மாஜிஸ்டிரேட் கிட்ட சொல்லி அவர் ஆக்ஷன் எடுக்கிறார்னு வைப்போம். அப்புறம் நான் ஆக்ஷன்ல இருக்க முடியாது. ஆமாம் ஸார். அப்புறம், எல்லா பெஞ்சு கிளார்க்களும், பகையாயிடுவாங்க. தாக்கல் செய்யுற மனுவுக்கு, உடனே நம்பர் கிடைக்காது, உடனே புரஸிடிங்ஸ் போகாது. மொத்தத்துல, என் கட்சிக்காரன் என் மேலேயே கேஸ் போடுற நிலைமை வந்துடும். ஆனால், ஒண்னு ஸார். இந்த நாட்டை அடியோடு மாற்றி, புது சொஸைட்டி, புதுச்சட்டம் வந்தாலொழிய யாரும் எதுவும் பண்ணமுடியாது. பேயாட்சி செய்தால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்னு பாரதி சொன்னான். ஏன் ஸார் அப்படிப் பார்க்கிறீங்க? நான் காலேஜ்ல பேச்சுப் போட்டிகள்ல பரிசுகள் வாங்கிட்டு, இப்போ நம்பர் கிளார்க்கிட்டே நாய் படாதபாடு படுறவன. ஸாரி. எங்க பாஸ்களை அதிகமாய்த் திட்டுனக்கு மன்னிச்சுடுங்கோ."

பேராசிரியர். பெருமாள்சாமி, மேகலாவையும் முத்தையா வையும், பாருங்கள் என்பதுமாதிரி பார்த்துவிட்டு, அந்த இளம் வக்கீலையே பார்த்தார். உயிர்போன லட்சியத்தின் உயிர்ப்பான சமாதிபோலத் தோன்றிய அந்த வாலிபர், கல்லூரி சஸ்பெஸ்டின் வழக்கில், ஏட்டு சுரைக்காயான ஸ்டேய் ஆர்டரை வாங்கிக் கொடுத்த பெரிய வக்கீலின் சின்ன சூனியர்.

இவர் மனதிலும் இவ்வளவு பெரிய பிரளயமா? இப்படி எல்லோர் மனதிலும், நெருப்புத் துண்டுகள் கிடக்குமோ? கோல்ட் மெடல் வாங்குன என்னை, கோலி விளையாடுறவன் படாதபாடு படுத்துறான். லா படிச்ச இவன், லோ பயல்கிட்ட தொங்குறான். இப்படித்தான் நியாயம், அநியாயத்துக்கிட்ட எல்லா கட்டத்துலயும் தொங்குதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/110&oldid=558718" இலிருந்து மீள்விக்கப்பட்டது