பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதை பழைய கல்லூரியின் முதல்வரின் அறைக்குள், மனிதர்கள் பேசுவது போலவோ அல்லது கத்துவது போலவோ கேட்கவில்லை. அந்த் அறையே அவதாரமாகி, வாசலென்னும் வாய் திறந்து, அசுரத்தனமாய் கத்துவது போலிருந்தது. அந்தச் சத்தம். டிரஸ்ட் போர்ட் சேர்மன் அப்பாவு போட்ட சந்தந்தான். வெளியே, அவரைப் பார்ப்பதற்காக, அங்குமிங்குமாய் சிதறியபடி நின்று கொண்டிருந்த அவரது ஆதரவாளர்களுக்கே, அந்த உசத்தியான சத்தம் பிடிக்கவும் இல்லை. பிடிபடவும் இல்லை. காதுகளைப் பொத்திக் கொண்டார்கள்.

ஆனால் -

அறைக்குள், தனது சுழல் நாற்காலியை, அப்பாவுவிடம் கொடுத்துவிட்டு, அவர் முன்னால், அந்தக் காலத்து எலிமென்டரி மாணவன்போல், தரையில் இருந்து கால்கள் அறுபது டிகிரியும், முதுகு முப்பது டிகிரியுமாய் நிற்க, டிரஸ்ட் போர்ட் சேர்மன் சுழன்ற சுழப்பிற்கேற்றபடி தனது முகத்தைச் சுற்றிய தற்காலிக முதல்வர் பேராசிரியர் மாணிக்கம், அப்போது காதுகளை கையால் அடைத்தால், தன் வயிற்றிலும், தான் பெற்ற ஐந்து பெண்கள் கழுத்துக்களிலும் அடிவிழும் என்பதை அறிந்தவராய், அப்பாவு கத்தக் கத்த, இவர் தன் வாயை மட்டும் அகலமாக்கி அகலமாக்கி, குரல் செத்த மனிதராய் அடியற்ற மரம்போல் சாயப் போனார்.

அப்பாவு, எகிறிக்கொண்டே போனார்:

"ஒங்க மனசுல என்னய்யா நெனச்சுக்கிட்டீங்க? அந்தப் பயல் குருநாதன், டீச்சர் அஸோஸியேஷன் செயலாளர் என்கிற தெனாவட்டுல மிதக்கான். கிளாஸ்ல உட்கார்ந்து பாடம் நடத்துனால் நடத்துறான், நடத்தாட்டால் போறான். ஆனால், என்னைப் பார்த்தால், ஒரு மரியாதைக்காவுது எழுந்திருக்கல? ஏதாவது ஒரு சாக்குல, அவனுக்கு ஒரு மெமோ கொடுங்க மீதியை நான் கவனிச்சுக்கிறேன்னு ஒங்ககிட்டப் படிச்சுப் படிச்சு சொல்லிட்டேன். நீங்க செய்திங்களா? கேவலம் ஒரு லெக்ஸ்ரர் பயலுக்கு ஒரு மெமோ கொடுக்க முடியல. நீங்கெல்லாம் பிரின்ஸ்பாலா? ஒங்களை, அப்படிக் கூப்பிட எனக்கே வெட்கமாய் இருக்கு ஸார். மனுஷன்னா நன்றி இருக்கணும்:

தற்காலிக முதல்வர், வெட்கத்தை வெளிநடப்பு செய்யவிட்டு, நன்றியுடன் பதிலளித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/111&oldid=558719" இலிருந்து மீள்விக்கப்பட்டது