பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 100

"நீங்க ஆயிரம் சொல்லுங்க, தாங்கிக்கிறேன். ஏன்னால், குட்டுப்பட்டாலும், மோதிரக் கையாலதான் குட்டுப்படுறேன். ஆனால், நன்றிக் கெட்டவன்னு மட்டும் நினைக்காதிங்க என் பொண்ணுங் களுக்கு, நீங்க அந்த ரவுடிப் பசங்ககிட்டே இருந்து பாதுகாப்புக் கொடுத்ததையோ, உலகமே அறியாத எனக்கு இந்த பொறுப்பான போஸ்டை தந்ததையோ நான் மறக்கல. மறக்க மாட்டேன்."

"ஆனால்.... அந்த குருநாதனுக்கு மெமோ கொடுக்கச் சொன்னதை மட்டும் மறந்திட்டிங்களாக்கும்."

"அந்த வாலிபர், ஆசிரியர் கூட்டணிச் செயலாளர். மெமோ கொடுத்தால், தர்ணா செய்வார். அதோட காலேஜ் கவுன்ஸில் எதிர்க்கும். அகடாமிக் கவுன்ஸில் வரைக்கும் விவகாரமாயிடும். இதனால எனக்கு மட்டுமில்ல, ஒங்களுக்கும் ஆபத்து-"

"ஏன் சுத்தி வளைச்சுப் பேசுறிங் ஸார்.? என்னால, அவனை சமாளிக்க முடியாதுன்னு நினைக்கிறீங்க. அப்படித்தானே?

தமிழ்ப் பேராசிரியரும் தற்காலிக முதல்வருமான மாணிக்கனார், அப்பாவுவை, அடிபட்ட பூனைபோல் பதுங்கிப் பார்த்தார். எப்படி இந்த மனிதருக்கு உண்மையை நான் சொல்லாமலே கண்டுபிடிக்க முடியுது? பண்டைக்காலத்தில், பெண் கொலை செய்த ஒரு மன்னன் போல் தோன்றும் இந்தக் கிராதகனிடமிருந்து, எப்படித் தப்பிப்பது? இவனை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக ஏதாவது செய்தால், என் மகிழ்ச்சி என்னாவது?

திருதிருவென்று விழித்த முதல்வரை, அப்பாவு முறைத்தார். அந்த முறைப்பின் முனைச்சூடு தாங்க முடியாமல், முதல்வர், நாக்கு வாய்க்குள் தப்புத் தாளங்களுடன் நர்த்தனமாட உளறி உளறிப் பேசினார்.

"குருநாதனுக்கு மெமோ கொடுக்கேன். அதுல கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்ட படி'ன்னு - அதாவது, அஸ் டைரக்டட் பை டிரஸ்ட் போர்ட்னு ஒரு வரி சோத்துக்கிறேன். அப்பவும், இப்போ மெமோ கொடுக்க முடியாது. தப்பு செய்யாத ஆசிரியர் அவர். கிளாஸ் கட் பண்ணல. கண்ணுல விளக்கெண்ணெய் போட்டு ஏதாவது கண்டு பிடிச்சால்தான் உண்டு."

"நீங்க விளக்கெண்ணெய் போடுங்க; அதுக்குள்ள பழைய பிரின்ஸ்பால் பெருமாள்சாமி நாம ரெண்டு பேரையும் நல்லெண்ணெய் போட்டு தாளிக்கப் போறான் பாருங்க. ஒங்களைச் சொல்லிக் குற்றமில்ல ஸார்; தப்பு என் மேலதான் ஸ்ார். டிரஸ்ட் போர்ட் யாரை வேண்டுமானாலும் பிரின்ஸ்பாலாய் போடலாம். அதுக்கு சீனியாரிட்டி தேவையில்லன்னு ஒங்களுக்குத் தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/112&oldid=558720" இலிருந்து மீள்விக்கப்பட்டது