பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 * சத்திய ஆவேசம்

"தெரியும். இல்லாவிட்டால், நான் இந்த போஸ்டுக்கு வந்திருக்க முடியாது என்கிறதும் தெரியும்."

"இன்னும் எவ்வளவோ தெரியப் போகுது பாருங்க. எங்க தாத்தா கட்டுன இந்த காலேஜிலேயே படிச்சுட்டு அந்த கோணிக்காரன் மகன் முத்தையா, பெருமாள்சாமியோடு, கோர்ட் கோர்ட்டாய் சுத்துறான். காலேஜ்லயும் ஐஞ்சாறு வாத்தியாருங்களும், பசங்களும் அவன் இழுத்த இழுப்புக்குப் போறாங்க. இவங்க மேல எதையாவது காரணம் காட்டி, ஆக்ஷன் எடுங்கன்னு எத்தனையோ தடவ சொல்லியாச்சுது. நீங்க தலையை ஆட்டித்தான் ஆக்ஷன் காட்டுறிங்க. ஆமாம். தெரியாமல்தான் கேட்கேன். நிசமாவே ஒங்களுக்கு ஒண்னும் தெரியலியா..? இல்ல. என்னை கிண்டல் செய்யுறிங்களா? ஏன்னா, இந்தக் காலத்துல, சொல்றதுக்கெல்லாம் தலையை ஆட்டுறதும் ஒருவித கிண்டல்தான்."

"அய்யோ. அய்யகோ. நான் போய் ஒங்களை எள்ளி நகையாடுவேனோ? என் வாய்தான் தாங்குமா? சிக்கலை ஒங்ககிட்டே சொல்லிட்டேன். ஒங்களுக்கா அதை முறியடிக்கத் தெரியாது?

“தெரியும், தெரியும். ஒங்களுக்குப் பதிலாய் இன்னொரு புரபஸ்ரைப் பிரின்ஸ்பாலாய் போட்டால், எந்தச் சிக்கலும் வராது. பெருமாள்சாமி, கோர்ட் மூலம் நெருங்குறான். நீங்க பழையபடியும், ஒங்க தமிழ் டிபார்ட்மென்ட் இருக்கிற குதிரை லாய கட்டிடத்துக்குள்ளே, பழையபடியும் போகப் போறிங்க."

"அப்படி ஒரு நிலமை ஏற்பட்டால், காட்டுக்குப் போகவேண்டும் என்று மாகயத்தி கைகேயி சொன்னதும், பாரவண்டியில் இருந்து விடுபட்ட காளை மாடு மாதிரி மகிழ்ந்த ராமபிரான் போல, நானும் மகிழ்வேன்."

அப்பாவு திடுக்கிட்டார். காளை மாடு போன்ற உடற்கட்டோடும், பசு போன்ற தோரணையுடனும், நெற்றியை விபூதி மறைக்க, சைவப் பழமாகத் தோன்றிய அந்த அப்பாவி மனிதரை, ஆழமாகப் பார்த்தார். முப்பதாண்டு காலமாக வேலை பார்த்தாலும், மூன்று வருட அனுபவம்கூட இல்லாதவர் இவர். மலையாளத்தில் சுத்தன். துஷ்டனோட பலன் தரும் என்று ஒரு பழமொழி இருக்காமே. அதன் தமிழ் டிரான்ஸ்லேஷன் இவர். இவரைப் பகடையாகப் பயன்படுத்துறவன், பன்னாடையாபோ யிடுவான்.

அப்பாவுவால், தன் முன்னால் கூனிக்குறுகி, குற்றவேல்காரராய் நிற்கும் பேராசிரியர் மாணிக்கத்தை, விரும்பவும் முடியவில்லை. வெறுக்கவும் முடியவில்லை. ஆனால், ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். இவருக்குப் பதிலாக வேறொருவரை முதல்வராகப் போட்டாக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/113&oldid=558721" இலிருந்து மீள்விக்கப்பட்டது