பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 102

யாரைப் போடலாம்? புரபஸர் ராஜ்கண்ணு. சாதிக்காரன் வேண்டாம். சாதியிலயும் பாகம் பிரிப்பான். பாட்டனி புரபஸார். எட்வர்ட்... கெட்டிக்காரன். ஆனால், அவனை வச்சு நாம் சம்பாதிக்கிறதைவிட, அவன் நம்மை வச்சு சம்பாதிக்கிறது அதிகமாய் இருக்கும். ஜூவாலஜி புரபஸர் கோபால்ராவ்? வேண்டாம் தவளை வாங்குறதுலகூட கமிஷன் வாங்குகிறவன். புரபஸர் நடராஜன்? பாடம் நடத்துறதுல சமர்த்தன். மாணவர்கள் கலாட்டா செய்யாத ஒரே ஒரு வாத்தி. அப்படிப் பட்டவனைப் போடுறது, கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொருகிறது மாதிரி. அப்படியானால். இந்த கிராக்குகளுக்குப் பதிலாய் யாருமே இல்லையா? ஏன் இல்ல? என் அக்கா மகன் அஸிஸ்டெண்ட் புரபஸர் மனோகர் இருக்கானே. எனக்கும் ஒரு மகள் இருக்காளே.

ஒரு பொருளை உற்று நோக்கியபடியே, பிறிதொரு பொருளைப் பற்றிச் சிந்திக்கும் ஒருவித யோக நிலையை அனுசரிப்பவர்போல், அப்பாவு, மாணிக்கத்தைப் பார்த்தபடியே, மேலே குறிப்பிட்டவர்களைப் பார்த்தார். இதற்கிடையே, முதல்வர், "எனக்கு கிளாஸ் இருக்கு போய் அட்டென்டென்ஸாவது எடுத்திட்டு வரட்டுமா? என்றார். அப்பாவு, அவர் போகலாம் என்பதுபோல் கையாட்டியபோது, பேராசிரியர் மாணிக்கம், தட்டுத்தடுமாறி, ஒரு விவகாரத்தை எடுத்துரைத்தார்.

"சேர்மன் எது சொன்னாலும் கேட்டுக்கங்க. ஆனால், என்கிட்ட கேளாமல் எதுவும் செய்யாதிங்கன்னு செகரட்டரி இன்ஸ்டிரக்ட் செய்திருக்கார். இப்போ என் நிலைமை இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரி ஆயிட்டுதே அய்யா."

"இன்னும் என்னவெல்லாமோ ஆகும். அதுக்கு முன்னால வகுப்புக்குப் போங்க ஸார். மணியடிச்ச பிறகு வந்தால் போதும். என்னை கொஞ்ச நேரம் தனியாய் விடுங்க சார்."

தற்காலிக முதல்வர் பேராசிரியர் மாணிக்கம், அப்பாவுவை மகிழ்ச்சியாகப் பார்த்து விட்டு, விழாத குறையாக ஒடினார். பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களுக்கு புறநானூறில் வீரம் என்பது பற்றிப் பாடம் நடத்த வேண்டும் அதற்காக நேற்றே குறிப்பெடுத்துவிட்டார்.

பேராசிரியர். மாணிக்கனார், வாசலைத் தாண்டியபோது, அதற்காகக் காத்துநின்ற சில கல்லூரி ஊழியர்கள் உள்ளே போகப் போனார்கள். வராண்டாக்கள் பக்கமும் கேன்டின் பக்கமும், தற்செயலாய் போவதுபோல் போய், அங்கே மாணவர்களும் ஆசிரியர்களும், மற்றும் பலரும் எப்படி எப்படிப் பேசிக் கொள்கிறார்கள் என்பதை கண்ணால் பார்த்துவிட்டு, காதால் கேட்டு தீர விசாரிக்காமலலேயே தினமும் சேர்மனிடம் ஒப்பிப்பவர்கள் இவர்கள் கோள்முட்டையின் கனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/114&oldid=558722" இலிருந்து மீள்விக்கப்பட்டது