பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 * சத்திய ஆவேசம்

தாங்க முடியாமல் நின்ற இவர்கள், இப்போது மூட்டையை இறக்கி வைக்க, உள்ளே ஓடினார்கள். ஆனால், அப்பாவு, அவர்களைப் பாதியிலேயே வாயால் வழி மறித்தார்.

"ஏய்யா. வாறிங்க.. போங்கய்யா. என்கிட்ட ஒரு பேச்சு: செக்ரட்டரிக்கிட்ட ஒரு பேச்சு என்னய்யா பேச்சு, இது? மனுஷன்னால் ஒரே பேச்சுல நிற்கணும். ஒரே பேச்சத்தான் கேட்கணும். நீங்க மனுஷங்களா? ஒங்களால இந்த காலேஜ் குட்டிக்சுவராப் போச்சு. போங்கப்பா என் மூஞ்சில விழிக்காதிங்க'

கல்லூரியின் கோள்சொல்லி டிபார்ட்மெண்ட் உறுப்பினர்கள், சிறிது தயங்கி, சிறிது மயங்கி, பின்னர் சிறிது சிறிதாய் பின்நோக்கி நகர்ந்து மாயமாய் மறைந்தனர்.

தனித்து விடப்பட்ட அப்பாவு, அனிச்சையாகச் சுழல் நாற்காலியை ஆட்டினார். அந்த நாற்காலி மாதிரியே, அவர் தலையும் சுற்றியது. முன்பெல்லாம், தான் இப்படிக் கத்தும்போது, இதே இந்த ஊழியக்கும்பல், தலையை சொறிந்துகொண்டு. இங்கேயே நிற்கும்ட அவர் முகத்தில் சினம் மறைந்து சிரிப்பு வந்த பிறகுதான் போகும். ஆனால், இப்போதோ அட போய்யா என்பது மாதிரி போய்விட்டார்கள் எல்லாம் இந்த செகரட்டரி டயலால் வந்த வினை. இந்த செகரட்டரி பயல், இந்த பிரின்ஸ்பால் பயல்கிட்ட எப்படி உத்தரவு போட்டிருக்கான்? இதுக்கா அவனை பிள்ளையாய் பெற்றேன்? இதுக்கா அவனைப் படிக்க வச்சேன்? இதுக்கா, அவனுக்கு இன்டஸ்டிரி வச்சுக் கொடுத்தேன்? இதுக்கா அவனை டிரஸ்ட் போர்ட் செயலாளனாய் நியமிச்சேன்? வீட்ல என் பழைய பெண்டாட்டிக்கும், அவன் புதுப்பெண்டாட்டிக்கும் ஆயிரம் இருக்கலாம். அதை காலேஜ் நிர்வாகத்துலயா காட்டுறது? பிரகலாதன் கதையை என்கிட்டேயே நடத்திக் காட்டுறான். மாமியார்-மருமகள் மல்யுத்தத்தை, அப்பன்-பிள்ளை அறக்கட்டளைப் போராய் மாற்ற நினைக்கான்.

இருக்கட்டும். இருக்கட்டும்.

அப்பாவு, சிறிது வாய்விட்டே புலம்பினார். உலகத்திலேயே முக்கியமான தேர்தல், அடுத்த மாதம் வரப்போகிறது. அந்த டிரஸ்ட் போர்ட் தேர்தலில், இப்போ செயலாளராய் இருக்கும் பெற்ற மகனே, “என் அப்பா வீட்டுக்குள்ள முடங்குனால்தான், காலேஜ் முடங்காதுன்னு வெளிப்படையாய் வாக்காளர்கள் கிட்ட பேசுறானாம். புதுப்பெண்டாட்டி சொல்லிக் கொடுத்ததை அவளுக்கு அவள் அப்பன் அந்த சகுனிப் பயல் சொல்லிக் கொடுத்தை, இந்த திரியோதனன் அப்படியே ஒப்பிக்கிறான்: ‘ஒங்கப்பா அவரு கோட்டாவுல, அட்மிஷனுக்குப் பணம் வாங்கட்டும். தப்பில்ல. ஆனால், ஒங்க கோட்டாவுல எதுக்கு வாங்கணும்? எங்கப்பான்னால் அவரோட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/115&oldid=558723" இலிருந்து மீள்விக்கப்பட்டது