பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 104.

கோட்டாவையும் ஒங்களுக்குக் கொடுப்பாராக்கும் என்று பெண்டாட்டி 'முத்தம் போட்டு, சொன்னதால, மாமனாரையே டிரஸ்ட்போர்ட் சேர்மனாய் ஆக்கப்போறானாம். இந்த டிரஸ்ட் போர்ட் பசங்களும், ஒங்கப்பாவுக்கு வயசாயிட்டு அதனாலதான் பெர்ஸனலாய் முடிக்க வேண்டிய விஷயத்தை கோர்ட்டுக்கு இழுத்துட்டார். இதுக்கெல்லாம் டிரஸ்ட்போர்ட் செலவளிச்சால், கட்டுபடியாகுமா? என்று கேட்கிறான்களாம். என்னடா நினைச்சிங்க? யானைப் படுத்தாலும் குதிரை மட்டமுன்னு ஒங்களுக்குக் காட்டுறேண்டா. பெருமாள்சாமி என்னை சேத்துல சிக்குன யானையாய் ஆக்கிட்டான் என்கிறதால, நீங்க. தவளைப்பசங்க. கிண்டலாய் பண்றிங்க? பார்த்துப்புடலாண்டா.

பேராசிரியர். பெருமாள்சாமியின் பெயர், நெஞ்சில் அடிபட்டதும் அப்பாவுவிற்கு, நேற்று, தன் வக்கீல் டெலிபோனில் பேசியது நினைவுக்கு வந்தது. "ஐ அம் ஸாரி சேர்மன். நீங்க. பெருமாள் சாமியை சேர்த்துக்காமல் போக்குக் காட்டுறது, ஜட்ஜூக்கு கோபத்தை உண்டு பண்ணிட்டு. என்ன ஸார். ஒங்க கிளயன்ட். ஸ்டேய் கொடுத்தேன் சேர்த்துக்கல. டைரக்ஷன் கொடுத்தேன். ஏத்துக்கல. இப்போ கண்டம்ப்ட் ஆப் கோர்ட் வந்திருக்கு ஒங்க ஆள் கோர்ட்டுக்கு இன்னும் வரல. எத்தனை நாளைக்கு மிஸ்டர் வாய்தா? ஒங்க சேர்மன் என்ன நெனச்சிக்கிட்டார்? கோர்ட்ல வந்து, பப்ளிக்கா மன்னிப்புக் கேட்டு, மிஸ்டர் பெருமாள்சாமியை பிரின்ஸ்பாலாய் சேர்த்துக்காட்டால், உள்ளே போக வேண்டிய திருக்குமுன்னு சொல்லுங்க மிஸ்டர், அட்வகேட். இது, ஹைகோர்ட். அவரு விளையாடுறதுக்கு டிரஸ்ட் போர்ட் இல்லன்னு சொல்லுங்க" என்று ஜட்ஜ் சொல்லிட்டார். 'இதுக்குமேல, என்னால தாக்குப் பிடிக்க முடியாது. ஒன்று பெருமாள்சாமியை சேர்த்துக்கங்க இல்லன்னா, என்னை ஒங்க நாஸ்டி கேஸ்ல இருந்து நீக்கிருங்க. ஏன்னா, நீங்க ஒங்களுக்கு குழி வெட்டிக்கலாம். ஆனால், எனக்கும் சேர்த்து வெட்டப்படாது பாருங்க என்று பேசுறான். யாரு? ஹைகோர்ட் ஆயிரம் சொல்லட்டும். அந்த பெருமாள்சாமி, காலேஜ் காம்பவுண்டுக்குள்ளே கூட வரமுடியாதுன்னு சொன்ன அதே அந்த வக்கீல்

அப்பாவுவால், பேராசிரியர் பெருமாள்சாமியை, மீண்டும் முதல்வராக நினைத்துப் பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு நிலமை ஏற்பட்டால், காலேஜையே ராத்திரியோடு ராத்திரியாக தீ வைத்துக் கொளுத்திடவேண்டும் என்ற அளவிற்கு - அப்படி அந்தக் கல்லூரி தீப்பற்றி எரிவதை கற்பனைக் கண்களால் பார்க்கும் அளவிற்கு, அவருக்கு கொழுத்த கோபம் ஏற்பட்டது. பெருமாள்சாமி, மீண்டும் பதவிக்கு வந்தாலும், அவரை மீண்டும் வேறொரு காரணத்தை வைத்து, 'சஸ்பென்ட் செய்யமுடியும் என்பது அவருக்குத் தெரிந்ததுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/116&oldid=558724" இலிருந்து மீள்விக்கப்பட்டது