பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 * சத்திய ஆவேசம்

என்றாலும், ஒரு நாள்ல்ல ஒரு நிமிடம்கூட, பெருமாள்சாமி இந்த சுழல் நாற்காலியில் உட்கார்ந்தால், அவருக்கு தலை கழன்றுவிடும் போலிருந்தது. அதனால்தான் முன்னெச்சரிக்கையாக, கல்லூரியில் உள்ள அலுவலகப் பெண்ணான வசந்தியிடம், பெருமாள்சாமி, தகாது நடந்ததாக, வாடிக்கை பத்திரிகையில் கரடி விட்டாகி விட்டது. மாரல் டர்பிடுட் குற்றச்சாட்டில், பெருமாள்சாமியை வந்த வழியில், அனுப்பிடலாம். இந்த முப்பதாண்டு காலத்தில் எத்தனையோ பேரைப் பார்த்தாச்சு. இவன் எம்மாத்திரம்? ஆனால், அப்போ மகன் பிறக்கவே இல்லை. வாத்திப் பசங்களுக்கும் சங்கம் கிடையாது. கோணிக்காரன் மகன்கள் படிக்காத காலம். அதுக்கென்ன. காலம் மாறலாம், நான் மாறமாட்டேன். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. கெடுத்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

மேன்மகனான அப்பாவுக் கிழவர், சட்டைப் பித்தான்களைக் கழற்றிவிட்டு, மார்பின் நிர்வாணப் பகுதியை அகலமாக்கி, சுழல் நாற்காலியில் பின்புறமாய் சாய்ந்தபோது, அவர் முன்புறம், கல்லூரி 'கடைநிலை ஊழியர் ஒருவர் வந்து நின்றார். அப்பாவு என்னடா என்று கேட்கும் முன்பாக, சொல்ல வந்த விவகாரம் தலைபோகிற சமாச்சாரமாக இருந்தாலும், அதைச் சொல்லாமலேயே, தலையை சொறிந்து கொண்டு நிற்கவேண்டும் என்பதை தொழில் லட்சியமாகக் கொண்ட் ஊழியர் அவர். ஆகையால், அப்பாவு மல்லாந்து படுத்து, அவரைச் சொல்லச் சொல்வதுபோல், தன் கண்களை சொருகிச் சொருகிவிட்டாலும், அந்த ஆசாமி அசையவில்லை. கடைசியில் அப்பாவுதான், "சொல்லித் தொலையேண்டா..." என்றார். "யாரோ ஒருவர் ஒங்களைப் பார்க்க வந்திருக்கார். வாடிக்கை வாடிக்கை' என்கிறார்." என்று சொல்லிவிட்டு, சேர்மனின் பார்வையில் இருந்து தொலைவதற்காக, ஊழியர், நான்கடி பின்னால் நகர்ந்தபோது, அப்பாவு, "வந்து தொலையச் சொல்லு." என்றார்.

கீழே டைட் பேண்டும், மேலே வெள்ளை டி சட்டையும், காதுகளை மறைக்கும் சைட்பர்னும், பிடரியை பிடாரியோல் மறைக்கும் முடியும், உதட்டை மறைக்கும் மீசையும், மோவாயை மறைக்கும் குறுந்தாடியும் கொண்ட இளைஞன், வாயை மறைக்கும் சிகரெட்டோடும், முக்கை மறைக்கும் புகையோடும் வந்து, "ஹாய். அப்பாவு?" என்று சொல்லிக்கொண்டே, எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான். இது சரஸ்வதி வாழ்றா இடண்டா. சிகரெட்டை வெளில போட்டுட்டு வாடா என்றுகூடச் சொல்லப் போனார். ஆனால், அவன் செய்த உபகாரமான ஒரு அபகாரம் நினைவுக்கு வந்ததால், முட்டி வரை சுருண்டிருந்த வேட்டியை கால்வரை இழுத்துப் பரப்பி விட்டபடியே "எப்படி தம்பி இருக்கீங்க? ஒங்கள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/117&oldid=558725" இலிருந்து மீள்விக்கப்பட்டது