பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 106

ஆபீஸ்ல பார்த்ததைவிட, ரொம்ப மெலிவாயிட்டிங்களே? என்ன சாப்பிடுறீங்க..? என்றார்.

“t off.”

"என்ன தம்பி சொன்னிங்க?"

“.. ?iጋ”

"இது காலேஜ் தம்பி"

"அதனாலதான் பீர். வீடுன்னால், விஸ்கி."

அந்த இளைஞன் கக்கிய புகையை, தன் வாய்க்குள் தேக்கி விட்டுக்கொண்ட அப்பாவு, அவன் அப்படிச் சொன்னது வெறும் நகைச்சுவைக்குத்தான் என்று அவனே நினைக்கும்படி ஒரு சிரிப்பை வெளியிட்டார். அப்படியும், அவன் முகம் திருப்தியில்லாமல் முறைப்பதைப் பார்த்துவிட்டு, சரி ஒங்க ஆசையை நிறைவேற்றுரேன். ஒங்களோட, பிரபுவை அனுப்பி கவனிக்கச் சொல்றேன். என்ன விஷயமாய் வந்திங்க தம்பி. என்றார்.

"இந்த ஆளு. பெருமாள்.சாமி, எங்க பத்திரிகை மேல டி.பர்மேஷன் வழக்கு போட்டிருக்கார்"

"ஆமாம். கேள்விப்பட்டேன். சாப்பாட்டுக்கே அல்லாடுறான். போயும் போயும் ஒங்க பத்திரிகையோட மோதப் பார்க்குறான் பாருங்க. நீங்கதான் விடுவிங்களா?

"நாங்க விடுறதும் விடாததும் ஒங்களைப் பொறுத்திருக்கு."

"அடேய் இவனே! பிரபுவை கூட்டிட்டு வா. என்ன தம்பி சொன்னிங்க..?

"ஜாயிண்ட் எடிட்டர் சொல்லச் சொன்னதைத்தான், நான் சொல்றேன். எங்க பத்திரிகை ஒரு பெரிய நிறுவனம். அதுக்கு இப்போ பேர் இருக்கோ, இல்லியோ - அதனோட பழைய பேரைக் காப்பாற்ற வேண்டியது எங்க பொறுப்பு. எழுதுனது தப்போ, சரியோ, மன்னிப்புக் கேட்கமுடியாது."

'எதுக்குத் தம்பி கேட்கனும்? நடந்தது நிஜமாச்சே."

"ஆனால், ஒங்ககிட்ட நிஜமும், எங்களிடம் நிழலும் இருக்கு. அதனால நிஜத்த வாங்கிட்டுப் போகலாமுன்னு வந்தேன்."

"நான் அந்தக் காலத்து மனுஷன். புரியும்படியாச் சொல்லுங்க."

"ஹா. ஹா. இது கூடவா புரியல? ஒங்க காலேஜ் டைப்பிஸ்ட் வசந்தி, பெருமாள்சாமி மேல் கொடுத்த ஒரிஜினல் புகார் லெட்டர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/118&oldid=558726" இலிருந்து மீள்விக்கப்பட்டது