பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 * சத்திய ஆவேசம்

வேணும். போட்டோஸ்டேட் காபி லீகல் டாகுமென்ட் ஆகாது. ஒரிஜினலை பார்க்கணுமுன்னு எங்க லாயர் சொல்றார்."

"கோர்ட் ல என்னை சாட்சியாய் போடுங்க. இல்லன்னா, கோர்ட்ல இருந்து சம்மன் வரட்டும், ஒரிஜனல் புகாரரைக் கொண்டு வாரேன்."

"இப்போ தாறதுல என்ன சிரமம்? தாங்கோ. செக்கப் பண்ணிட்டு, ரெண்டு நாளையில திருப்பித் தாறோம்."

"தேடிப் பார்க்கணும். ஒண்னு செய்யுங்க, இப்போ நீங்க போங்க. நான் ரெண்டு நாளையில கொடுத்தனுப்புறேன்."

"லுக் மிஸ்டர். அப்பாவு! நீங்களும் பிரபுவும், டைப்பிஸ்ட் பெண் எழுதிக்கொடுத்த புகாரோட போட்டோஸ்டேட் காபியுடன் என்கிட்ட தொங்கோ தொங்குன்னு தொங்குனதை மறந்திடாதிங்க எடிட்டர்கிட்ட ஒங்களைக் கூட்டிப்போனவன் நான். நீங்க போனதும், எடிட்டர், ஒரிஜினலைக் கேளு என்றார். தேவையில்ல ஸார். நம்பிக்கையான கேஸ் என்று ஒங்களை நம்பிச் சொன்னவன் நான். இப்போ நான் ஒரிஜினல் லட்டரை எடிட்டர்கிட்ட காட்ட வேண்டிய நிலமை வந்திருக்கு. ஒரிஜினலோட நான் அங்கே போகாட்டால், எடிட்டர் என்னையும் ஒரு பெருமாள் சாமியாக்குவார். ஒரு எடிட்டர் ரிப்போர்ட்டரை சஸ்பென்ட் செய்யுறது, ஒரு ஹஸ்பெண்ட் ஒய்பை சஸ்பென்ட் செய்யுறதை விட சிவியர்."

"என்ன படிச்சிருக்கிங்க..?

"எம்.ஏ. எதுக்குக் கேட்டீங்க..?

"அப்படி ஒங்க எடிட்டர் ஒங்களை நீக்கிட்டால், நேராய் என்கிட்ட வாங்க. இந்தக் காலேஜ்லயே ஒங்களை லெக்சரராய் போடுறேன்."

"டோண்ட் பிளாப். மிஸ்டர். அப்பாவு, ஒங்ககிட்டே சேர்ந்து பெருமாள்சாமிக்கு வந்த நிலைமை எனக்கு வரணுமா? நோ நான்சென்ஸ். ஐ அம் நாட் கட் அவுட் பார் டீச்சிங். எனக்குக் பாடம் நடத்துறதைவிட, பிடிக்காதவங்களுக்குப் பாடம் கற்பிக்கிறதுலதான் இன்ட்ரஸ்ட், காலேஜ்ல கிளாஸ் எடுத்து, மாணவங்க கிட்ட கிக் வாங்குற வேலை, தாஜ் கொரமென்டலிலேயோ, அடையார் கேட்லயோ கிளாஸ் பிடிச்சு கிக்காய் இருக்கிற வேலைக்கு ஈடாகுமா? விஷயத்துக்கு வருவோம். எடிட்டர்கிட்டே நீங்களே வந்து சொல்லிட்டுப் டோங்க"

"எடிட்டரை வெறுங்கையோட பார்க்க விரும்பல. இன்னும் இரண்டு நாளையில, டைப்பிஸ்ட் ஒரிஜினல் புகார் லெட்டரோடயும், பெருமாள்சாமி சம்பந்தப்பட்ட வேறு சில ரிக்கார்ட்களோடயும், நானே எடிட்டரை வந்து பார்க்கிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/119&oldid=558727" இலிருந்து மீள்விக்கப்பட்டது