பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 108

"மற்ற ரிக்கார்டுங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் மிஸ்டர். அப்பாவு, ஒங்க கிளார்க்குங்களே பெருமாள்சாமி சம்பந்தப்பட்ட சில ரிக்கார்டுகளை காபி எடுத்துக் கொடுத்திருக்காங்க. பத்து வருஷத்துக்கு முன்னால, அவரோட புரபஸர் எழுதுன கம்ப்ளெயின்ட் உட்பட பல கிடைச்சிருக்கு. இதுக்காக ஒங்க பசங்களுக்கு ஆயிரம் ருபாய் அழுதிருக்கோம் அவங்கதான் டைப்பிஸ்ட் பெண், அப்படி ஒரு புகார் லெட்டரைக் கொடுக்கலன்னு சொன்னாங்க அதனாலதான் எடிட்டருக்கு பயம் வந்துட்டு. இப்படி நம்பிக்கை மோசம் பண்ணலாமா மிஸ்டர் அப்பாவு?

"நீங்க மட்டும் காலேஜ் ரிக்கார்டுகளை திருடலாமா?"

"மிஸ்டர். அப்பாவு நீங்க அயோக்கியன் மாதிரி பேசுறிங்க. எனக்கு இப்பவே ஒரிஜினல் லெட்டர் வேணும்."

"யாருடா நீ. கம்மனாட்டி. அயோக்கியன் கியோக்கியன்னு பேசுனே. பல்லு கழண்டுடும். மரியாதையில்லாம சிகரெட் பிடிச்சே, மரியாதை இல்லாம பீர் கேட்டே, பொறுத்துக்கிட்டேன். இப்போ, என்னையே மரியாதை இல்லாமப் பேசுறே. ஒரிஜினல் லெட்டரை பற்றி, ஒன் எடிட்டர்கிட்ட டெலிபோனில பேசிக்கிறேன். போலீஸ்ல இப்போ ஒப்படைக்கிறதுக்கு முன்னால போயிடு."

ரிப்போர்டர் இளைஞன், அசந்து விட்டான். இவன் இப்படி அசத்தியது எடிட்டருக்கு தெரியப்படுத்தப்பட்டால், அவர் ஒரேயடியாய் அசத்திவிடுவார் என்பதும் இதனால் பழையபடியும் தெருவுக்கு வரவேண்டியது இருக்கும் என்பதும் அவனுக்கு ஒலி ஒளி காட்சியாய் தோன்றியது. ஆனாலும், அப்பாவுவை நோக்கி ஒரு பாவலா முறைப்போடு வெளியேறினான்.

அப்பாவு சுழல் நாற்காலியை, முன்னும் பின்னுமாய் நகர்த்தியபடியே முன்யோசனை இல்லாமல் செய்த ஒரு காரியத்திற்காக பின்யோசனை செய்தார். பேராசிரியர் பெருமாள்சாமியை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஆத்திரப் புத்தியுடனும், அவர், தப்பித் தவறி நீதிமன்றம் மூலம் பதவிக்கு வந்தாலும், அவராகவே அவமானப்பட்டு அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற அவசரப் புத்தியுடனும், மாணவன் பிரபுவோடு, வாடிக்கை பத்திரிகை அலுவலகம் போய், பெருமாள்சாமியைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் பேசினார். பிரபு, அப்பாவுவே எதிர்பாராத வகையில், பேராசிரியர் பெருமாள்.சாமி, டைப்பிஸ்ட் பெண்ணிடம் முறைகேடாக நடந்ததாகக் குறிப்பிட்டான். அவளே எழுத்துமூலம் புகார் தெரிவித்திருப்பதாகவும் ஒரு போடு போட்டான். அவர்கள் சொல்வதை, அதுவரை, உப்புச்சப்பில்லாமல் கேட்டுக் கொண்டிருந்த எடிட்டர், உடனே, அப்பாவுவின் மெளனச் சம்மதத்திற்கிடையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/120&oldid=558728" இலிருந்து மீள்விக்கப்பட்டது