பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 110

நாளைக்கு என்ன செய்வானுவளோ? என்கிட்ட வரும்போது மட்டும் எப்படிக் குழையுறானுங்க. தத்தேறிப் பசங்க.

அப்போதுதான், அறைக்குள் நுழையப்போன முதல்வரைப் பார்த்து, வசந்தியை நான் கூப்பிட்டேன்னு சொல்லுங்க. கொஞ்சநேரம் வேற எங்கேயாவது உட்காருங்க" என்றார். இயல்பிலேயே, சூடு, சுரணை இல்லாத மாணிக்கனாருக்குக்கூட, அப்பாவு தன்னை வேலையாளாய் நடத்துவது கண்டு ரத்தம் கொதித்தது. ஆனாலும் அது தன்மானத்திற்குக் கீழேதான் கொதித்தது. நடந்துவந்த வழியாக திரும்பி நடந்தார்.

ஐந்து நிமிடத்திற்குள், பிரபுப் பயல் வந்தான்.

"என்னைத் தேடினிங்களாமே"

"ஆமாம், தெரியாத்தனமாய் ஒன்னை காலேஜிற்குள்ளே தேடச் சொல்லிட்டேன். போகட்டும். வசந்தியா கொஞ்சம் வெளியே நில்லு. உள்ளே ஆள் இருக்கும்போது வரப்படாதுன்னு உள்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? மூளை இருக்கா? அப்புறம் ஒன்கிட்ட இருக்குதா?”

"என்ன ஸார், என்னையும் சேர்த்து"

"நான் மூளையை கேட்கலப்பா. அதைவிட முக்கியமான வசந்தி எழுதுனது மாதிரி எழுதுன-போட்டோ ஸ்டேட் காபியைக் கேட்கிறேன். நான் வீட்ல எங்கேயோ வச்சுட்டேன்."

பிரபு, ஒரு நமுட்டுச் சிரிப்பை நமுட்டியபடியே, கையில் இருந்த குட்டி லெதர் பேக்கைத் திறந்தான். (அதற்குள் பல குட்டிகள் புகைபடங்களும் உள்ளதாம்) பிறகு, அப்பாவு கேட்ட நகலை எடுத்து, அவரது இரண்டு கண்களுக்கும் இடையே வைத்து ஆட்டியபடியே, "எப்போவாவது தேவைப்படுமுன்னு, நீங்க எங்கே கேட்டாலும், எப்போ கேட்டாலும் எடுத்த எடுப்பிலேயே கொடுக்கிறதுக்காக, வைத்திருக்கேன்" என்றான். அப்பாவு நகலை வாங்கிக் கொண்டார். பிறகு "சரி, நீ இப்போ போ. தேவைப்படடால் நானே ஒன்னைக் கூப்பிட்டு அனுப்பறன்" என்றார். "நீயாக வரவேண்டாம்" என்று சொல்லாமல் சொன்ன அப்பாவுவை அதிர்ச்சியோடு பார்த்தபடியே பிரபு, இடத்தைக் காலி செய்தான்.

பிரபு போனதும், வசந்தி வர முயற்சித்தாள். அப்பாவுவிற்குப் பயந்து, அவளால் படிதாண்ட முடியவில்லை. "ஒன்னை ஸ்பெஷலாய் வெத்தில பாக்கு வச்சுக் கூப்பிடணுமா? சட்டுப்புட்டுன்னு வா" என்று அப்பாவு கத்துவது, தன்னைத்தானா, வேறு யாரையுமா என்று தயங்கினாள். பிறகு தயங்கியபடியே உள்ளே போனாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/122&oldid=558730" இலிருந்து மீள்விக்கப்பட்டது