பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 112

தகாத வரிகளை எழுதியது போல் தன் கையெழுத்து இருப்பதைக் கண்டு, அவள் தடுமாறினாள்.

"இது என் கையெழுத்துத் தான், ஆனால் சத்தியமாய் நான் எழுதல. எப்படி இப்பல்லாம்."

அப்பாவு சிரித்தார். கடகடவென்று சிரித்தார். அவளை, அல்வாத் துண்டாய் வாய்க்குள் போடப்போகிறவர்போல் சிரித்தார். பிறகு, எங்கேயோ பார்த்தபடி, தன்னையே பார்த்த வசந்திக்கு ஆணையிட்டார்:

"அந்த ஆராய்ச்சி ஒனக்கு எதுக்கு? நீ. தூரத்து பேத்தியால் இருந்தாலும், பேத்திதான். இதே மாதிரி, ஒரு லட்டரை டைப் அடிச்சு, கையெழுத்துப் போட்டு தாத்தா கிட்டே கொடு. எல்லாப் பயலும் போன பிறகு டைப் அடி, சாயங்காலமாய் வீட்டுக்குக் கொண்டுவா, ஒனக்கு ஒரு நல்ல இடத்துல கல்யாணம் செய்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு, சரி. போ. ஏன் நிற்கிறே."

"உங்களை மாதிரி பெருமாள்சாமி ஸார் தங்கமான மனுஷர். அவரைப் பற்றி நான் எழுதுறது, உங்களைப் பற்றி எழுதுறது மாதிரி..."

"பிலாக்கணம் வேண்டாம். சொன்னதைச் செய்யும்மா. தாத்தா கிட்ட நன்றி காட்ட, ஒனக்கு சந்தர்ப்பம் வந்திருக்கேன்னு சந்தோஷப்படு."

"உயிரைக் கூட நன்றியாய் கொடுக்கலாம். மானத்தைப் எப்டிய்யா."

"ஒஹோ. அம்மா மயிர் போனால் வாழாத கவரிமானோ? அடச்சீ மொதல்ல சொல்றதைச் செய். சாயங்காலமாய் என் வீட்டுக்கு நீ வாரே, லட்டரோட வாரே. என்னாலே ஆக்கவும் முடியும், ஆக்கியதை அழிக்கவும் முடியும் என்கிற நினைப்போடு இப்போ போரே. ஒன்னைச் சாகவா சொல்றேன்? யாருக்கும் தெரியாமல், ஒரு லட்டரை தரச் சொல்றேன், தரப்படாதா?

வசந்தி, அப்பாவுவை புதிதாய்ப் பார்த்தாள். புயலாய் நோக்கினாள். வீட்டில் ஒளியேற்றி வைத்ததாக நினைத்தவள், தன்னை வீட்டுக்குள்ளேயே தீயிடப் போகிறவர்போல் பார்ப்பதைப் பார்த்தாள். இவரைப் பகைக்க முடியுமா? அப்படிப் பகைத்தால், வேலையில் இருந்து மட்டுமா நீக்குவார். பெருமாள்சாமி லாருக்கே இந்தக் கதியென்றால், எனக்கு எந்தக் கதியோ?

வசந்திக்கு, இருக்கை முள்ளாகியது முகம், வேர்வைக் கொப்பளங்களாக ஆனது. அவள், உட்கார்ந்திருந்தாலும், கைகால்கள் தானாய் நடக்கப் போவதுபோல், அந்தரத்தில் தொங்கப் போவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/124&oldid=558732" இலிருந்து மீள்விக்கப்பட்டது