பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 114

வசந்தி, தொங்கிய தலையோடு, கண்களில் பொங்கிய நீரோடு நடந்து கொண்டிருந்தாள். கேட் பக்கம் வந்ததும், லேசாக தலையைத் தூக்கினாள். உடனே ஒருசில மாணவர்கள் அவளைப் பார்த்து ஆடிக் காட்டினார்கள். சிலர், பாடிக் காட்டினார்கள். ஒருவன் "கோர்ட்டுக்கு வரத்தாம்மே போறே ஒன்னை நார் நாராய் கீச்சுப் பிடுறோம் கீச்சு" என்று சொல்லி, அபிநயம் வேறு செய்து காட்டினான். உடனே, ஒரே கைதட்டல்கள்.

வசந்தி மெல்ல திரும்பினாள். எங்கிருந்தோ ஓடிவந்த முத்தையா, அவர்களை திட்டுகிற வார்த்தைகள் லேசாக கேட்டன.

என்றாலும், வசந்தி முரண்பட்ட பல்வேறு உணர்வுகளின் வடிவங்களாக நடந்து கொண்டிருந்தாள். மரணத்தின் நெருங்கங்களாக வந்த பல்லவன்களையும் ஆட்டோ சிக்ஷாக்களையும், அவைகளே ஒதுங்கட்டும் என்பதுபோல் ஒதுங்காமல் நடந்து கொண்டிருந்தாள்.

நான்கு போர்ஷன்கள் கொண்ட வசிப்பிடம். அதில் முதல் போர்ஷனில் வசந்தியின் குடும்பம். அம்மா, இரண்டு மூன்று போர்ஷன்காரர்களோடு சிரித்துச் சிரித்து எதையோ பேசிக் கொண்டிருந்தாள். அவள் தோளை கட்டிக் கொண்டு விம்மப்போன வசந்தி, தன்னை அடக்கிக் கொண்டு, அம்மாவையும் இதர பெண்களையும் மெளனமாகக் கடந்தபடி, வீட்டிற்குள் போய் தூக்குப் பையை வீசியடித்துவிட்டு செருப்புக்களை சிதறி எறிந்துவிட்டு, ஆடைகளை மாற்றாமல், அப்படியே கட்டிலில் குப்புறப் படுத்தாள்.

மகள், அகாலத்தில் வருவதைப் பார்த்துவிட்டு, கோவிந்தம்மா உள்ளே ஓடிவந்தாள். மகளின் தோளைப் பிடித்து உலுக்கியபடியே, "என்னம்மா? சீக்கிரமாய் வந்துட்டே? உடம்புக்கு என்ன பண்ணுது..? என்று சொல்லிவிட்டு, மகளின் நெற்றிப் பொட்டில் கைவைத்து 'டெம்பரேச்சர் பார்த்தாள். வைத்த கை, ஈரம் பட்டதைப் பார்த்ததும், மகளைத் தூக்கியபடியே, "என்னம்மா.. எதுக்கும்மா அழுவுறே? சொல்லும்மா சொல்லுடி" என்று அரற்றினாள்.

தலையணையில், கண்களைத் தேய்த்தபடி அங்குமிங்குமாய்ப் புரண்ட வசந்தி, திடீரென்று எழுந்தாள். அம்மாவின் கழுத்தை அப்படியே கட்டிப் பிடித்தபடியே "என்னை எதுக்கும்மா பெத்தே? எதுக்குப் பெத்தே? என்று புலம்பியபடியே கேவினாள், வெடிபட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/126&oldid=558734" இலிருந்து மீள்விக்கப்பட்டது