பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 * சத்திய ஆவேசம்

மானத்தின் சிதறல்களாய் விம்மல்கள் வெடிக்க, அம்மாவின் தோளில், தலையைப் புரட்டியபடியே "நான் வாழப்படாதும்மா.... வாழப்படாதும்மா." என்று ஒரே வார்த்தையைப் பல தடவை சொல்லிக்கொண்டே இருந்தாள். கோவிந்தம்மாவும் பதறிவிட்டாள். அதே சமயம், மகளின் அழுகை அவளுள் ஒரு ஆவேசத்தையும் எழுப்பியது. "அழாதம்மா. அழுகைதான் ஏழைகளோட சத்துரு எது நடந்தாலும் நம்மை ஒண்னும் பண்ண முடியாது என்கிற நம்பிக்கையோட இருக்கணும். என்னம்மா நடந்தது? அழாமல் சொல்லும்மா." என்றாள்.

வசந்தி, விக்கி விக்கிச் சொன்னாள்.

"அப்பாவு தாத்தா என்னை ஏலத்துல எடுத்தவர்மாதிரி நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததாய் சொல்லச் சொல்றார். நான். அப்பா மாதிரி நினைக்கிற பழைய பிரின்ஸ்பாலுக்கு எதிராய் மானங்கெட்ட விதமாய் கம்ப்ளெயின்ட் எழுதிக்கொடுக்கச் சொல்றார். காலேஜ் பசங்க என்னடான்னா கண்டபடி கலாட்டா பண்ணுறாங்க. நாக்கைப் பிடுங்கிட்டுச் சாகலாம் போல இருக்கும்மா. துக்குல தொங்கலாம் போல இருக்கும்மா. முன்னால எங்க பழைய பிரின்ஸ்பாலை பற்றி பொத்தாம்பொதுவா அபாண்டமா ஒரு செய்தி வந்ததுக்கே, நான் மூணு நாள் துங்கல. இப்போ, அந்த செய்தியையே ஒரு புகார் மனுவாக்கி அதுல அப்பாவு தாத்தா என்னை கையெழுத்து போடச் சொல்றாரு. ஒரு அப்பாவி மனுசன மேல நான் எப்படிம்மா அபாண்டமா எழுதுனதுல கையெழுத்து போட முடியும்? எம்மா.. நான் கேட்கிற கேள்விக்கு... ஒரே ஒரு கேள்விதான். பதில் சொல்லும்மா. என் சம்பளம் இல்லாமம் அப்பா சம்பளத்துல இப்போ மாதிரியே ஒன்னால் குடும்பத்தைக் கொண்டுபோக முடியுமாம்மா? முடியுமுன்னால் அப்படிச் சொல்லிட்டியானால், நான். என் உயிரை. ஒரு கயித்துலயோ, மருந்துலயோ முடிச்சுக்கிறேன். அம்மா. அம்மா. என்னால. கோர்ட்ல போய் பொய்சாட்சி சொல்ல முடியாது."

கோவிந்தம்மா, மகளைக் கட்டியணைத்தபடி விம்மினாள். பிறகு "ஒன் சம்பளம் இல்லாம என்னால குடும்பத்த நடத்த முடியும். ஆனால் நீ இல்லாம, ஒன்னைப் பெற்ற இந்த பாவியால இருக்க முடியுமாடி? என்ன வார்த்தம்மா சொல்லிட்டே? இன்னொரு தடவ அப்படிச் சொன்னால், ஒனக்கு முன்னால் நான் போயிடுவேன். வாயைப் பொத்துடி, மிஞ்சிப் போனால் வேலையை விட்டுடலாம். இந்த அப்பாவு, ஒன்னோட தாத்தாவால முன்னுக்கு வந்தவரு. அவர் ஒன் மானத்தைப் பற்றி கவலைப் படமாட்டார். அவரு மானத்தைப் பற்றி எவரும் கவலைப் படாத காலம் வரும். இதுக்குப் போயா அழுகிறே? அப்பாவு வேலை தந்தது வாஸ்தவம்தான். அவருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/127&oldid=558735" இலிருந்து மீள்விக்கப்பட்டது