பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 * சத்திய ஆவேசம்

கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் உலையை கொதிக்க

வைத்தபோது, காலேஜ் பியூன் ஆரோக்கியசாமி வந்தார். துரத்து உறவு.

தொங்கு மீசை. ஐம்பதுக்கு உட்பட்ட வயது. ஆட்களை ஒரு கண்ணை

மேலேயும், இன்னொரு கண்ணை கீழேயும் வைத்துப் பார்ப்பவர்.

"வசந்தியை எங்கம்மா?

"உட்காருண்ணா."

"வசந்தியை எங்கேக்கா? அப்பாவு, அவள கையோடு கூட்டிட்டு வரச் சொன்னார்.”

“எதுக்காம்?"

"காலையிலே எதுலையோ ஒண்ணுல கையெழுத்துப் போடச் சொன்னாராம். ஒன் பொண்ணு தயங்குனாளாம். சாயங்காலம் வரைக்கும் டயம் கொடுத்தாராம். இது, அவரா சொல்லல, நானா தெரிஞ்சுக்கிட்டது. வசந்தியை கூட்டுட்டு வா. யோசிச்சாள்னா, வர முடியுமா, வர முடியாதான்னு மட்டும் கேட்டுட்டு வான்னு மட்டும் என்கிட்டே சொன்னார். வசந்திய எங்க?"

"தூங்குறாள்."

"இதென்ன நேரங்கெட்ட வேளையில?"

"திக்கற்றவங்களுக்கு துக்கம்தான் தூக்க மாத்திரை. நம்மள மாதிரி ஏழைகளுக்கு இதுதான் இயற்கை தார தானம்'

ஆரோக்கியசாமி, வந்த வேகத்தில், பாதி வேகத்தை விட்டு விட்டார். கோவிந்தம்மா, தன்னையும் ஏழைகள் லிஸ்டில் சேர்த்துக் கொண்டத்தில், அவருக்கு, அட்மிஷன் பெற்றோர்களைப் பார்த்தது போன்ற மகிழ்ச்சி. இது தெரியாமல், ஆபிஸ் பயல்கள் என்னடாவென்னா, அவரும அட்மிஷன்ல பிள்ளையார்சுழியாய் வாங்கி, இப்போ பணக்கார பெருச்சாளியாக மாறிட்டதாய் பேசிக்கிறாங்களாம். ‘இவன்-ஆரோக்கியம்-அப்பாவு மேல உள்ள ஒட்டுண்ணின்னு ஜூவாலஜி டிபார்ட்மென்ட் அட்டெண்டர் பேசுறானாம்.

ஆரோக்கியசாமி, சிந்திப்பதை விட்டுவிட்டு, அந்த வீட்டின் வறுமைத் தடயங்களை நோட்டம் விட்டபடியே, "வசந்திய எழுப்பும்மா." என்றார். இதற்குள், கோவிந்தம்மா, அவருக்கு ஒரு 'டி' போட்டுக் கொடுத்துவிட்டு, அவர் குடிப்பது வரைக்கும் காத்திருந்தாள். கோவிந்தம்மா, மன்றாடும் குரலில் பேசினாள்:

"இந்தா பாருண்ணா! இதோ துக்கத்துலே தொலைஞ்சு போனவளை, என் மவளாய்ப் பார்க்காமல், ஒன் பொண்ணா பாரு, இவளால நடக்காததை சொல்லவும் முடியாது. எழுதவும் முடியாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/129&oldid=558737" இலிருந்து மீள்விக்கப்பட்டது