பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 118

"சொல்லவும் வேண்டாம், எழுதவும் வேண்டாம். சொல்ற இடத்துல ஒரு சின்ன கையெழுத்தத்தான் போடணும்."

"என்ன பண்றதுன்னா? என் புத்தியும், என் வீட்டுக்காரர் புத்தியும் உருப்படாத புத்தி. சின்ன வயசுலேயே, இவளை உண்மையை பேசும்படியாய் பழக்கிட்டோம். இப்போ காலேஜ் சகவாச தோசத்துல, உண்மையை பேசாமல் இருக்கப் பழகிட்டாள். ஆனால் அதுக்கு எதிர்மாறாய் பேசுறதுக்கு இன்னும் பழகல. பழகுவாள்னும் தோணல. கோர்ட்டுக்கு இவள் வந்தால், அப்பாவு மாமாதான் தோத்துடுவார். இது கூடவா அவருக்கு தெரியல..."

"அவருக்கு எது தெரியும் என்கிறது முக்கியமில்ல. அவரு சொன்னபடி செய்யாவிட்டால், ஒன் மவளுக்கு என்ன நடக்குமுன்னு ஒனக்குத் தெரியுறதுதான் முக்கியம்."

"இந்தா பாருண்ணா! இப்போ, இவளை ஒன்கூட அனுப்பினால், இவள், என்கிட்ட திரும்பி வருவாளான்னு சந்தேகம் வரது. அப்பாவு மாமா, எடுத்த எடுப்பிலேயே ஏதாவது செய்திடுவார்னு சொல்லல. இவள் வழியிலயே உயிரை மாய்ச்சுக்குவாள். ஒனக்கும் பிள்ளைகுட்டி இருக்கு"

ஆரோக்கியசாமி, முகத்தைப் பின்வாங்கினார். அப்பாவுவிடம் பொய் சொல்றதா? அப்படிச் சொல்லிட்டு தப்பிக்க முடியுமா? ஆனாலும், இந்த கோவிந்தம்மா முகத்தைப் பார்த்தால். எனக்கும் பிள்ளைகுட்டி இருக்குன்னுவேற சொல்றாளே.

"இன்னைக்கு எப்படியோ சொல்லிடுறேன். நாளைக்கு. நாளை மறுநாளைக்கு."

"நாளைய காரியத்த நாளைக்குப் பார்த்துக்கலாம். நான் இப்போ, ஒவ்வொரு நாளாய் வாழப் பழகிட்டேன். இன்னைக்கு ஒன் புண்ணியத்துல நாங்க தப்பிச்சதாய் இருக்கட்டும். போண்ணா. அவரு காரை எடுத்துட்டு இங்கே வருமுன்னால போயிடு."

ஆரோக்கியசாமி, எதுவும் பேசாமல் நின்றார். ஒரு வேளை, மனிதாபிமானத்தில் ஈடுபட்டு அப்பாவுவிடம் சொல்லக்கூடிய பொய் அம்பலமானால், தன்பலம் என்ன என்பதை கணக்குப் போட்டுப் பார்த்தாரோ என்னவோ. சிறிது நேரம் பேசாமல் நின்றுவிட்டு, யோசித்து யோசித்து நடந்தார்.

கோவிந்தம்மாவால், சமையல் வேலையைக் கவனிக்க முடியவில்லை. வாசலில் வந்து உட்கார்ந்தபடி, முட்டிக்கால் முனைகளில் முகத்தைப் போட்டுக் கொண்டாள். மூச்சு, வேக வேகமாக இயங்கியது. நுரையீரல், தொண்டைக்குள் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/130&oldid=558738" இலிருந்து மீள்விக்கப்பட்டது