பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 * சத்திய ஆவேசம்

அடைத்துக் கொள்வதுபோல் தோன்றியது. இவளுக்கு, விவகாரம் வேலை பறிப்டோடு போனால், அதுவே புண்ணியம். அப்பாவு மாமா பழிவாங்குவதில் ஒநாய். வேலையைத்தான் விட்டுட்டாளேன்னு நினைக்க மாட்டார். ரவுடிப் பயல்களை ஏவி விடவும் தயங்க மாட்டார். இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது?

சிந்தனையே சிலந்தி வலையாக, பல்வேறு உணர்ச்சிகளால் சுழற்றப்பட்ட கோவிந்தம்மா, சத்தம் கேட்டு நிமிர்ந்தாள். கன்னையா, சாம்பல் நிற யூனிபாரத்தோடு வந்தார். மனைவி ஒரு மாதிரி இருப்பதை பாத்துவிட்டு, அவளை ஒரு மாதிரி பார்த்தார். சற்று குள்ளமானவர். பூஞ்சை உடம்பு. ஆஜானுபாகுவான கோவிந்தம்மாவுக்கு அவர் சரியா மேட்ச் இல்லை என்று அந்தக் காலத்தில் பலர் நினைத்ததுண்டு. அவ்வளவு ஏன்? இப்படி கோவிந்தம்மாவே நினைத்திருக்கிறாள். ஆனால் இயல்பிலேயே பயந்த் சுபாவம் கொண்ட அந்த மனிதர், தன்னிடம் வம்புதும்பு செய்து பிறந்தவீட்டுக்கு அனுப்பாததில் அவள் பெருமைப்பட்டாள்.

கணவரிடம், விஷயத்தைச் சொல்லி ஆறுதல் தேட நினைத்த கோவிந்தம்மா, அவரிடம் வந்ததும் வராததுமாக சுமையைக் கொடுக்க விரும்பவில்லை. காலையில் ஏழு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டு, இப்போதுதான் வீட்டுக்கு வருகிறார். அது என்ன கம்பெனியோ, அவர் பார்ப்பது எட்டு மணிநேர வேலையில்லை. எட்டு மணியில் இருந்து வேலை.

வசந்தியும் படுக்கையில் புரண்டு புரண்டு, கண்களை விழித்து விழித்து, பிறகு திடுதிப்பென்று எழுந்தாள். நான்கைந்து வினாடிகள் சலனமற்று இருந்த மனதிற்குள், துயரவெள்ளம் பாய்கிறது. தூக்கத்தில் கரைந்த துக்கம், வெள்ளத்தில் மிதந்தது. வசந்தி, அப்பாவையே, பார்த்தாள். டீ போடுவதற்காக மீண்டும் ஸ்டவ்வை' பற்றப் போன கோவிந்தம்மா, மகளிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கண்களால் சைகை செய்தாள். எத்தனையோ நாட்களுக்கோ, மாதங்களுக்கோ. அல்லது ஆயுள் முடிவது வரைக்குமோ, தாங்கப் போகிற பிரச்சனையை, கொஞ்சநேரம் காக்க வைத்தால்தான் என்ன?

கோவித்தம்மா, கணவனிடம் ஒரு டம்ளரையும், வசந்தியிடம் ஒர டம்ளரையும் நிட்டிவிட்டு, காலி டம்ளர்களை பார்த்த பயல்களுக்கு, எஞ்சியதைப் பங்கிடப் போனாள். கன்னையா, காபி குடித்து முடித்துவிட்டதால், அவரிடம் அன்றைய நிகழ்ச்சிகளை ஒப்பிக்கப் போவதற்கு முன்னுரையாக இருமியபடியே தற்செயலாய் வீதியைப் பார்த்த அவள் கண்கள் அந்தப் பக்கமே பார்த்தன.

வாசலில், பளபளப்பான கார் ஒன்று நின்றது. டிரைவர் இருக்கையில் இருந்த ஒருவர், அவள் கவனத்தைக் கவரும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/131&oldid=558739" இலிருந்து மீள்விக்கப்பட்டது