பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* க.சமுத்திரம் 120

‘ஹார்ன் அடித்தார். பின்னிருக்கையில் இருந்த ஒருவன், அவளை வரும்படி சைகை செய்தான். கோவிந்தம்மா, அவர்களையை உற்றுப் பார்த்தாள். இதற்குள் காரின் பின்னிருக்கையில் இருந்து இருவர் இறங்கினார்கள். ஒருவன் கையில் டேப்ரிக்கார்டர் இன்னொருத்தன் கையில் ஸ்டெனோகிராபர்கள் குறிப்பெடுக்க வைத்திருப்பது போன்ற நோட் புத்தகம். டேப் ரிக்கார்டர். தடித்த தோல் கொண்ட பொட்டலத்தில், இருந்தது. நோட் புக் வைத்திருப்பவன் அப்பாவுவிடம் போனானே, அதே நிருபன்.

இருவரும் அட்டகாசமாக உள்ளே வந்தார்கள். நிருபர், தடியனைக் கண்காட்ட, அவன் டேப் ரிக்கார்டரை முடுக்கி விட்டான். சத்தம் கேட்டு, வசந்தி உட்பட, எல்லோரும் வாசலுக்கு வந்தார்கள். கோவிந்தம்ா எழுந்து நின்றாள். நிருபர், கேள்வியைத் துவக்கினார்.

"நீங்கதானே டர்னர் கன்னையா? இவங்கதானே ஒங்க பொண்ணு வசந்தி?"

கோவிந்தம்மா பதிலளித்தாள்.

"மொதல்ல நீங்க யாரு? அதைச் சொல்லுங்க.."

"நாங்களா.... நாங்க வாடிக்கை பத்திரிகையில இருந்து வந்திருக்கோம், ஒங்க டாட்டரை இன்டர்வியூ பண்ணப்போறோம். அவங்க போட்டோவும், ஒங்க குடும்பப் போட்டோவும் வேணும். எங்க பத்திரிகையில ப்ெரிசா போடப் போறோம்."

கோவிந்தம்மா, நிதானமான படபடப்போடு கேட்டாள்.

"பெரிசா போடுறதும், சிறிசா போடுறதும் அப்புறம் என்மகள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் இல்லை. சினிமாக்காரியும் இல்லை. அவளை எதுக்காக போட்டோ எடுக்க வந்தீங்க?"

"என்னம்மா பயந்து பயந்து பேசுறிங்க? ஒங்க டாட்டர் கிட்ட பழைய பிரின்ஸ்பால் பெருமாள்சாமி தகாத விதத்துல நடந்திருக்கார். அப்படியும் திமிர்ல கோட்டுக்குப் போயிருக்கார். நீங்க சும்மா இருந்தாலும், நாங்க சும்மா இருக்க முடியுமா? அந்தக் கிழவனை ஒழிச்சிக்கட்ட வேண்டாமா? எங்கெல்லாம் அநியாயம் நடக்குதோ, அதை அம்பலப்படுத்தறதுதான் எங்க பத்திரிகையோட வேலை. ஒங்களுக்கு பணம் வேணுமா, தர்றோம். வேலை வேணுமா, வாங்கித் தர்றோம். ஒங்க ஹஸ்பெண்டுக்கு ஒர்க்ஷாப் வச்சுக் கொடுக்கணுமா, கொடுக்கிறோம். எங்க எம்.டி. எந்த வகையிலும் உதவத் தயார். அவருக்கு, பணம் துரசு. மிஸ். வசந்தி பழைய கர்நாடகமாய் இருக்கப்படாது. கொஞ்சம் இப்படி வந்து டேப் ரிக்கார்டர்ல பெருமாள்சாமி எப்படி மிஸ்பிஹேவ் செய்தார்னு சொல்றிங்களா டேப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/132&oldid=558740" இலிருந்து மீள்விக்கப்பட்டது