பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 * சத்திய ஆவேசம்

ரிக்கார்டை அட்ஜெஸ்ட் பண்ணுப்பா. ஒன்னை மாதிரியே கராபுரா சத்தம் போடுது பார்.

கோவிந்தம்மா, நிதானம் குலையாமல் கேட்டாள்.

"இவ்வளவு எழுதினிங்களே, என் பொண்ணைப் பற்றி எழுது முன்னால, ஒரு வார்த்தை அவள்கிட்டே கேட்டு எழுதினிங்களா? உங்களைப் பற்றி இப்படிச் சொல்றாங்களே என்ன விஷயமுன்னு ஒரு வார்த்தை கேட்டிங்களாய்யா"

"அது வந்து, அப்போ அவசரம். அட்ரஸ் சரியா தெரியல." "இப்போ மட்டும் வீடு எப்படிய்யா தெரியுது?

"பழையதை விட்டுடுங்கம்மா. ஒங்களுக்கு என்ன வேணும்? பிரிஜ் வேணுமா? போன் வேணுமா? உதவத் தயாராய் இருக்கிறவங்கிட்டே பகையாளி மாதிரி பேசுறிங்களே."

"நீங்க பகையாளியைவிட மோசமானவங்கய்யா. ஒங்களுக் கென்ன, எழுதிட்டிங்க. அந்த செய்தி பொத்தாம் பொதுவாய் வந்தாலும், என் கண்மணி படுறபாடு உங்களுக்கு தெரியுமாய்யா? கட்டுப் பாட்டுல இருந்த என்னோட நோயோட நான் படுறபாடு தெரியுமாய்யா? இதே மாதிரி அந்தப் பெரிய மனுஷன் பழைய பிரின்ஸ்பால் மனம் என்ன பாடுபடுமுன்னு கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்திங்களாய்யா?

"இவ்வளவு நடந்த பிறகும் எங்ககிட்ட வந்து பணத்தையும் பதவியையும் காட்டுறீங்களே, எங்களைப் பற்றி ஒங்க மனசுல என்னய்யா நெனைக்கிறீங்க? பணத்தைக் காட்டினால், ஒரு ஏழைக் குடும்பம் மயங்கிடுமுன்னு ஒங்களுக்கு எந்தப் பயல்யா சொல்லிக் கொடுத்தது? ஏழைப் பொண்ணுன்னால் அவ்வளவு இளக்காரமாய்யா? ஒங்க கதையில் கதை வரணுமுன்னும், படம் வரணுமுன்னும் பல்லைக் காட்டுறவள்களைப் பார்த்துப் பார்த்து அதே மாதிரி, எல்லாரையம் நினைக்காதிங்க. கண்ணாடிக்குள்ளே தெரியறதாலே, அந்தக் கண்ணாடிக்குள்ளேயே எல்லாம் இருக்குதுன்னு நினைக்காதிங்க. மரியாதையாய் போங்கய்யா. தொடப்பத்தை எடுக்குமுன்னால போங்கய்யா."

கன்னையாவுக்கு, கண்கள் சிவந்தன. பையன்கள் பெற்றெடுத்த அம்மாவின் அருகே போய் நின்று கொண்டார்கள். வசந்தி, பின்பக்கமாய் நின்றபடியே பொறுக்கிப் பசங்ககிட்ட என்னம்மா பேச்சு, சொன்னதைச் செய்து காட்டாமல்?’ என்றாள்.

பத்திரிகைப் பையன்கள், தங்களுக்குத் தெரியாமலும், தங்களை மீறியும் பப்ளிஸிட்டிக்கும் பணத்திற்கும் மயங்காத பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை அப்போதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/133&oldid=558741" இலிருந்து மீள்விக்கப்பட்டது