பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 122

தெரிந்தவர்கள்போல் பேந்தப் பேந்த விழித்தார்கள். பிறகு “ஏதோ நடந்திருக்கு, சொல்ல மாட்டேங்கிறீங்க. பார்த்துடலாம்" என்று விiறாப்பாய் எகிறியபடியே பின்வாங்கிக் காருக்குள் ஏறினார்கள்.

கார் போனவுடனேயே, கோவிந்தம்மாவின் வாய் அகலமாகியது. ஆத்மா மூச்சு ஆவேசப்புயலாய் கூக்குரலிட்டது. ஆங். ஆங் என்ற சத்தம். கோவிந்தம்மாவின் கைகள் உயர்ந்து, அந்தரத்தில் ஆதரவைத் தேடின. 'அம்மா. அம்மா என்றபடியே வசந்தி, அம்மாவைப் போய்ப் பிடித்துக் கொண்டாள். பயல்கள் சத்தம் போடடு அழத் துவங்கினார்கள். கன்னையா, மனைவியின் கழுத்தை நீவிவிட்டார். எல்லோருமாயச் சேர்ந்து, அவளைக் கட்டிலில் போட்டார்கள். நல்ல வேளையாக, ஒன்றுமில்லை. அதிர்ச்சியில் புயலாய் வந்த மூச்சு, சன்னஞ் சன்னமாய் சிறிதாகியது. எதுவும் நடக்காதது போல் "வசந்தி, அம்மாவல முடியாதுன்னு நினைக்கேன் இன்னைக்கு ஒன் சமையல்தான்." என்றார் கன்னையா இழுப்போடு.

வசந்தி, அவசர அவசரமாக அடுப்பைப் பற்ற வைத்தாள் சமையல் வேலைகளைப் பார்த்தபடியே, அப்பாவிடம் டிரஸ்ட் சேர்மன் மிரட்டியதை திக்கித் திணறி, தீயில் கண்ணிரிட்டபடி சொல்லிக் கொண்டிருந்தாள். சொல்லி முடிக்கவும், சாதம் கொதிக்கவும் சரியாக இருந்தது. மகள் முடித்ததும், கன்னையா, தரையில் அப்படியே சாய்ந்தார். எந்த அப்பாவு சித்தப்பாவின் ஆதரவில், வசந்திக்கு ஒரு நல்ல இடமாய் பார்க்க நினைத்தாரோ. அந்த சித்தப்பா, கெட்ட இடமாய் போயிட்டாரே.

திடீரென்று, காரின் ஹாரன் சத்தம் கேட்டது. வெளியே எட்டிப் பார்த்த வசந்தி "அப்பா. போலீஸ். போலீஸ்" என்று சொன்னபடியே பதறி எழுந்தாள். கன்னையா வெளியே பார்த்தார். படுத்துக் கிடந்த கோவிந்தம்மா கையூன்றி பார்த்தாள்.

அப்போது வந்த அதே காரில், டிரைவர் இருக்கைக்கு அருகே இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், கால்மேல் கால் போட்டபடி, கன்னையாவை, கைதட்டிக் கூப்பிட்டார். சின்ன வயதில் கிராமத்தில் போலீஸ் பூச்சாண்டி பயம், அடி மனத்திற்குப் போனதாலும், பல தொழிலாளர்களை தடியடிப் பிரயோகங்களை மறைந்து நின்று பார்த்த அனுபவத்தாலும், போலீஸை பார்த்தாலும், கேட்டாலும், பேசினாலும் பயத்தைத் தவிர வேறு எதையும் பார்க்காத கன்னையா, இன்ஸ்பெக்டரைக் கையெடுத்துக் கும்பிட்டபடியே 'டபுளப்பில் ஒடினார். காரின் பின்னிருக்கையில் இருந்த நிருபர்கள் சிரித்துக் கொண்டார்கள். இன்ஸ்பெக்டர், அதட்டினார்:

"ஒன் பேருதான் கன்னையாவா"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/134&oldid=558742" இலிருந்து மீள்விக்கப்பட்டது