பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 * சத்திய ஆவேசம்

"ஆமாங்க ஸார்" "ஒன் பொண்ணு பெயர்தான் வசந்தியா? "ஆமாங்க ஸார்". “என்னய்யா இது? ஒன் பொண்ணு ஒருத்தன்மேல. மொலஸ்டேஷன் கம்ப்ளெயின்ட் கொடுத்துவிட்டு, இப்போ மறைக்கிறாளாம். தவறா கம்ப்ளெயின்ட் கொடுத்தாலும் தப்பு. எழுதுனதை மறைச்சாலும் தப்பு. ரெண்டும் கிரிமினல் குற்றம் தெரியுமா ஒனக்கு?

"தெரியுமுங்க" "தெரிஞ்சுமா ஒன் சம்சாரம் இவங்கள துடைப்பக் கட்டையால அடிப்பேன்னு சொல்லிச்சு? துடப்பத்தால அடித்ததைவிட, அடிக்கிறேன்னு மிரட்டுறது பெரிய குற்றம் தெரியுமா?

"தெரியுமுங்க." "இந்த வார்த்தைக்குமேல, ஒனக்குப் பேச வராதா? உன்னைப் பார்த்தால், பாவமாய் இருக்கு. ஆனா, ஒன் பொண்ணு செய்திருக்கிற காரியத்தைப் பார்த்தால்."

"அதுக்கும் என் பொண்ணுக்கும் சம்பந்தம் கிடையாதுங்க."

“எதுக்கும்." "இவங்க பேப்பர்ல வந்த விஷயத்துக்கும், என் மகளுக்கும்." “என்னய்யா பேசுறே? ஒன் மகளைப் பற்றி சும்மா எழுதுறதுக்கு இவங்களுக்கு என்ன தலவிதியா? நெருப்பில்லாமல் புகையுமாய்யா? போலீஸ்காரன் நான். என்னையே டபாய்க்கிறே." வாடிக்கை நிருபரும், கன்னையாவை இன்ஸ்பெக்டர் மாதிரியே அதட்டினான்.

"ஒன் பொண்ணுதான் ரிட்டன் கம்ப்ளெயின்ட் கொடுத்தது. இப்போ அவள் கம்ப்ளெயிண்டை விட்டுவிட்டால், அவளை நாங்க விடமாட்டோம்."

"என்னய்யா செய்விங்க? செய்யுறதை இப்பவே செய்யுங்க. தயாராய் இருக்கிறோம். தைரியம் இருந்தால் வாங்கய்யா."

இன்ஸ்பெக்டர், இருக்கையில் இருந்தபடியே தலையை நிமிர்த்தினார். கணவனுக்குப் பின்னால், மகளுக்கு முன்னால்,

அப்பாவி ஆட்டுக்குட்டி மாதிரி நின்ற இந்த பொம்மனாட்டியா இப்படிப் பேசுறது? இன்ஸ்பெக்டர் காரிலிருந்து இறங்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/135&oldid=558743" இலிருந்து மீள்விக்கப்பட்டது