பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கசமுத்திரம் 124

வாசல்கட்டில் ஏறி நின்றார். வசந்தி, அம்மாவுக்குப் பின்னால், தன்னை மறைத்துக் கொண்டு, அவ்வப்போது தலையை நீட்டினாள். கோவிந்தம்ாவின் சத்தம் கேட்டு போர்ஷன்காரர்களும் கூடினார்கள்.

"இன்ஸ்பெக்டர் ஸார், இனிமேல் ஒங்களுக்கும் எங்களுக்குந்தான் பேச்சு என் பொண்ணு அப்படி ஒரு கம்ளெயிண்ட் கொடுத்திருந்தால், அதை கோர்ட் மூலம் வாங்க வேண்டியது தானே? இவள் பெயரை வேணுமுன்னே வம்புக்கு இழுத்திருங்காங்க, இந்தப் பாவிப்பயலுக. இதைப் பற்றி போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் செய்ய எங்களுக்கு ஆள் பலம் இல்ல. கோர்ட்டுக்குப் போக பணபலம் இல்ல. ஆனால் ஒருபலம் உண்டு அதுதான் மானம் ஏய். வசந்தி. நீ. மொதல்ல உள்ளே போடி ஒங்க முன்னாலயே, என் பெண்ணை விடமாட்டேன்னு சொல்றான். நீங்களும் கேட்டுட்டு இருக்கிங்க."

இன்ஸ்பெக்டர், மோவாயைத் தடவினார். பெண்டாட்டியை அடக்க முடியாத கன்னையாவைச் சினத்தோடும், கோவிந்தம்மாவை சிறிது பயத்தோடும் பார்த்தார். வாடிக்கை நிருபன். இப்போது அடக்கமாய் பேசினான்.

"அந்தப் பொண்ணு காலேஜ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்தது உண்மைதான் ஸார்."

கோவிந்தம்மா சூடானாள். "அப்படியே கொடுத்தாலும், அதைக் கேட்க நீ யாருய்யா?

"நானா? நான் பத்திரிகை நிருபர். எங்கெல்லாம் அக்கிரமம் நடக்கோ, அதை அம்பலப்படுத்தி நியாயம் கேட்கிறவன்."

"அப்படியா? ரொம்ப சந்தோஷம். இதே தெருவுல டியூஸிஎஸ் கடையில நயம் அரிசி முட்டை முட்டையாய் ஹோட்டலுக்குப் போகுது. சாயங்காலமாய் வந்து எழுதுறியா? நானே எழுதிக் கொடுக்கேன். ஒன்னால பிரசுரம் செய்ய முடியுமா? இன்னும் ரெண்டு மூணு பணக்காரங்களும், ஒரு அரசியல்வாதியும் போடுற அக்கிரமங்களை, நானே எழுதித்தாரேன். அப்படி எழுதினால், உன்னால பேப்பர்ல போட முடியுமா? இன்ஸ்பெக்டர் ஸார் ஒங்களால என் உயிருக்கு உத்ரவாதம் தர முடியுமா? வசந்தி பேப்பரைக் கொண்டுவாடி என்னய்யர் சொல்றே. என்ன ஸார் சொல்றிங்க."

வசந்தி, பேசாமல் நின்றபோது - விவரம் தெரியாத தம்பிப்

பயல், தன் நோட்டுப் புத்தகத்தில் ஒரு தாளைக் கிழித்து அம்மாவிடம் நீட்டிவிட்டு, பென்ஸிலையும் கொடுத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/136&oldid=558744" இலிருந்து மீள்விக்கப்பட்டது