பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 * சத்திய ஆவேசம்

இன்ஸ்பெக்டர் மோவாயில் இருந்து கையை எடுக்கு முன்னாலேயே, நிருபன், திணறியபடியே, தான் கிரைம் ரிப்போர்ட்டராக இருக்கும்போது கமிஷனர் ஆபீஸில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து, இப்போது இன்ஸ்பெக்டரான, தன் நண்பரையே பார்த்தான். பிறகு, "அந்த அம்மா சொல்றதும் ஒரு வகையில் நியாயந்தான், ஒரே ஒரு ரிக்வஸ்ட். எங்க எம்.டி. உன்கிட்ட முடியாதுன்னால் என்கிட்டே கூட்டிட்டு வான்னு சொன்னார். மிஸ்.வசந்திகூட வரவேண்டாம், மிஸ்டர் கன்னையா வந்து, எங்க எம்டிகிட்ட, இப்போ இந்தம்மா என்ன சொன்னாங்களோ, அதையே சொல்லிபட்டும். அப்புறம் இந்தப் பக்கமே நாங்க வரமாட்டோம். ஸார். என்றான்.

இன்ஸ்பெக்டர், தன் தொப்பியைக் கழற்றி கையில் வைத்தபடியே 'இப்போ நான் போலீஸ்காரனாய் பேசல. எல்லோருக்கும் பிரதராய் பேசுறேன், கன்னையா! இதே கார்ல போய், எம்.டி கிட்ட போய், நீ என்ன சொல்லணுமுன்னு நினைக்கிறியோ, அதையே சொல்லிட்டு வந்திடு. ஏன் யோசிக்கிறே? ஏறுய்யா. ஒன் பாதுகாப்புக்கு நான் ஜவாப்புய்யா."

கன்னையா, தயங்கினார். பின்வாங்கினார். இன்ஸ்பெக்டர், இப்போது தொப்பியை மீண்டும் தலையில் கிரீடமாக்கியபடியே "நான் எல்லோருக்கும் பொதுவாய் பேசுறேன். ஒரு பெரிய மனுஷனைப் பார்த்து, விஷயத்தை நேரில் சொல்லிட்டு வராதுல தப்பில்ல. எதுக்கு சொல்றேன்னா, ஒரு தடவை எம்.டி.கிட்டே, விஷயத்தை நேர்ல சொல்லி ட்டால், அப்புறம் விவகாரம் இல்ல. எனக்கும் வேலை மிச்சம். கன்னையா கார்ல ஏறுய்யா. இந்தா பாருய்யா, நீ கார்ல ஏறாட்டால், ஒன்னை சட்டப்படி என்னால ஒண்னும் பண்ண முடியாதுதான். அதே சமயம், என்னைப் பகைச்சிட்டு, ஒன்னால இந்த ஏரியாவுல இருக்க முடியுமான்னு நினைச்சுப்பாரு, அப்புறம் ஒன் இஷ்டம். பின்னால வருத்தப்படக்கூடாது. நான் ஒண்னு சொல்றேன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கு

கன்னையாவிற்கு, டயம் கொடுப்பவர் போல, நாற்பதை வயதாலும், ஐந்தேமுக்கால் அடியை உடம்பாலும் தாண்டிய இன்ஸ்பெக்டர், கடிகாரத்தைப் பார்த்தபடி நின்றார். கன்னையா, மனைவியைப் பார்த்தார். கோவிந்தம்மா "என்னய்யா நெனைச்சிக்கிட்டே. எங்க அப்பாவு மாமாகிட்டச் சொல்லி ஒன்னை." என்று அனிச்சையாகச் சொல்லப் போனாள். அப்புறம்தான் தெரிந்தது, அப்பாவும் இதைத்தான் செய்யச் சொல்வார் என்பது. இனிமேல் அப்பாவுவின் பகை நிச்சயம். அந்தப் பகையை சமாளிக்க வேண்டுமானால், குறைந்தது இன் ஸ்பெக்டரின் நட்பு இல்லையானாலும், பகை கூடாது. அ. கடவுளே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/137&oldid=558745" இலிருந்து மீள்விக்கப்பட்டது