பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 126

கோவிந்தம்மா, யதார்த்தச் சூட்டில் அறிவு பூர்வமாய் தெளிந்து, உணர்ச்சி பூர்வமாய் தொதித்து, இறுதியில் அமைதியாக ஆணையிட்டாள்.

"பரவாயில்லை. கார்ல ஏறுங்க. எங்கப் பெண்ணைப் பற்றி, ஏதோ சலுகை காட்டுறது மாதிரி எழுதுறதுக்கு முன்னால, எங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டிங்களா? ஒருத்தியைப் பத்தி பொய்யா எழுதினால், எழுதுன கை அழுகிடுமுன்னு சொல்லுங்க, ஒங்களுக்கும் துச்சாதனனுக்கும் என்ன வித்தியாசமுன்னு கேளுங்க. சும்மா போங்க. இன்ஸ்பெக்டர் சொல்லிட்டார். தட்டக்கூடாது. தட்டமுடியாது. இல்லியா ஸார்."

இன்ஸ்பெக்டரால், கம்பீரமாகத் தலையை ஆட்ட முடியவில்லை. மழுப்பலாகச் சிரித்தார். நிருபன், அவர் கையை குலுக்கியதால் வழி கிடைக்காமல் நின்ற கன்னையா, குலுக்கல் முடிந்ததும், காருக்குள் ஏறினார். மனைவியையும் மகளையும் மருட்சியோடு பார்த்தார். இன்ஸ்பெக்டரும், காரில் ஏறிக் கொண்டார். பேப்பர்காரர்களுக்கு நடுவே உட்கார்ந்த கன்னையா, இன்னும் மனவிையைப் பார்ப்பதை

விடவில்லை.

கார் பறந்தது.

கோவிந்தம்மா என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று உள்ளுரப் பயந்தவளாய், கைகளை நெறித்தாள். இதுவரை எதுவும் பேசாமல் நின்ற ஊமை ஜனங்கள்- அதாவது இதர போர்ஷன்காரர்கள் "நீங்க ஒங்க புருசனை அனுப்பியிருக்கப் படாது. இன்ஸ்பெக்டர்னா என்ன கொம்பா என்று வாய்ச் சொல்லில் வீரம் காட்டினார்கள்.

'கடவுளே. என் அப்பாவிப் புருஷனை நல்லபடியா வீட்டுக்குக் கொண்டுவந்து சேரு என்று மனதுள் பிராத்தித்து, கோவிந்தம்மா, ஆகாயத்தைப் பார்த்துக் கும்பிட்டாள். திடீரென்று, அவளுக்கு முச்சிரைத்தது. அப்போது வந்த அதே புயல்முச்சு. வசந்தி, அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு விம்மினாள். வெடித்தாள். வேரற்ற மரம் போல அம்மா மீது சாய்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/138&oldid=558746" இலிருந்து மீள்விக்கப்பட்டது