பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(16)

கன்னையா, அந்த மாதிரி காரை வெளியே நின்றுதான் பார்த்திருக்கிறாரே தவிர, இப்படி உள்ளே இருந்து கண்டதில்லை. வெளியே வெயில் கொட்டிக் கொண்டிருந்த அதே நேரத்திலும், காருக்குள் சுகமோ சுகம் என்ற பாடல் ஒலிப்புடன் கிளுகிளுப்பான குளிர்மை, குளுகுளுப்பாகக் குலாவியது. வெளியே நிற்பவர்கள் உள்ளே பார்க்க முடியாத பைபர் கிளாஸ்கள் கொண்ட அந்தரங்கமான கார். காரின் முன்பகுதியில், டிரைவர் இருக்கையின் இடது பக்க மேட்டில், தங்கநிற பிரேமிற்குள் அடைபட்டு மின்னிய, வெண்தகடு போலவும், வெளுத்த பால் போலவும் தோன்றிய அதை ஆச்சரியமாகப் பார்த்தார். அது வீடியோ ஸ்கிரீன் என்பது, வீட்டிலுள்ள ஜன்னல்களுக்குக் கூட ஸ்கீரின் போட்டு பழக்கமில்லாத கன்னையாவிற்குத் தெரியவில்லை. காரில் அட்டகாசமாய் பேசிக்கொண்டு இருந்தவர்களை அடக்கமாகப் பார்த்தார். அவர் முகம், உள்ளத்து உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வீடியோ ஸ்கிரீன் போல் பல்வேறு தோற்றங்களைக் காட்டியது. இந்தக் காலத்திலேயும், சம்பந்தா சம்பந்தம் இல்லாத ஒரு இன்ஸ்பெக்டர் வந்து, ஒரு ஏழையை மிரட்டி, கெளரவமாகக் கடத்தப்படுவதற்கு உடந்தையாக இருக்க முடியும் என்பதை நினைக்க நினைக்க, அவருக்கு முதலில் ஏற்பட்ட ஆச்சரியம், அதிர்ச்சியாகியது. கன்னத்தில் கை வைத்து, அப்பாவி ஆட்டுக்குட்டி மாதிரி அவர்களையே பார்த்தார்.

'வாடிக்கை திருடன், இன்ஸ்பெக்டருடன் கொஞ்சி குலாவினான். "ஸ்ார். ஒங்களுக்கு கவிதை, கதை எழுத வருமா?" 'எதுக்கு கேட்கிறீங்க?"

"இல்ல. எங்க பத்திரிகையில, பிளாஷ் பண்ணலாமேன்னு கேட்டேன். ஏதாவது எழுதுங்க.."

"டிரை பண்றேன். எப்.ஐ.ஆர். எழுதுறதே ஒரு அனுபவம்தான். அதுக்கு கற்பனை வேணும்.... கதையம்சங்கள் புரியனும்.... ஜோடனை ஜொலிக்கணும்."

"பரவாயில்லையே! இதுதான் ஸார் ரியலிசம். இப்ப சொல்றது மாதிரியே எழுதுங்களிலார்;அட்டைப்படக் கதையாய் போட்டுறோம்."

"என் மிஸ்ஸஸ் எழுதுவாள். பட். பத்திரிகையில போடற அளவுக்கு எழுதவருமா என்கிறது தெரியல..."

"அந்தக் கவலைய எங்ககிட்ட விடுங்க. எப்படி எழுதினாலும் நாங்க இருக்கோம். ஒரு நாளைக்கு அவங்களை கதையோட அனுப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/139&oldid=558747" இலிருந்து மீள்விக்கப்பட்டது