பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 2

ஒப்பன் யூனிவர்சிட்டி என்கிறார்களே - அதுதான் தொடங்கி விட்டதுபோல், கல்லூரிக்கு வெளியே மாணவர்வெள்ளமும், அதற்கு அணை கட்டியதுபோல் போலீஸாரும் தென்பட்டார்கள். வட்டத்திற்குள் வட்டம் போல், மாணவர்கள், குழு குழுவாகக் கூடியும், பிரிந்தும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

வட்டதின் மையம் போல், முத்தையாவும், இதர மாணவர் தலைவர்களும், போலீஸ் வியூகத்தையும், முளியலங்காரி முதேவி சண்டாளிபோல் தோன்றிய கல்லூரிக் கட்டிடங்களையும் மாறி மாறி கண்களால் வட்டமடித்தபடி நின்றனர். கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களை அனுதாபமாகப் பார்த்துக் கொண்டே உள்ளே போனார்கள் - அதாவது “உள்ளே போவது போன்ற உணர்வோடேயே போனார்கள். எதையும் வரலாற்று பூர்வமாகப் பார்க்கும் ஹெட் ஆப் தி டிபார்ட்மென்ட் ஆப் ஹிஸ்டரி, கல்லூரிக்குள் போகும் போது, கண்ணாடியைக் கழற்றி, தன்னையறியாமலே கையில் வைத்துக் கொண்டு, அதன் மூலமாக மாணவர்களைப் பார்த்தார். ஒரு காலத்தில், மாணவர் போராட்டத்தை அடக்க வேண்டும் என்று வாதாடிய அவர், மூன்று மாதங்களுக்கு முன்பு தன்னை அடக்கப்போன டிரஸ்டிகளை, மாணவர்களே தாமாக முன்வந்து அடக்கி, தன் பதவியைக் காப்பாற்றியதை நினைத்து, காலப் பரிணாமத்தில் செதுக்கப்பட்டவர் போல் நடந்தார்.

மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தின் தான் தோன்றித்தனம் ஒழிக. . டிரஸ்டிகளின் கைப்பாவையாகச் செயல்படும் கல்லூரி முதல்வரே மனம் திருந்துங்கள் என்பவை போன்ற கோஷங்களை முழக்கிக் கொண்டிருந்தனர். போராட்டத்தில் பத்தாவது நாளான அன்று, போலீஸ் படை பெருகியதாலும், மான்னவர்களின் சஸ்பென்ட் எண்ணிக்கை அதிகரித்ததாலும், அவர்கள் மத்தியில் ஒரு பரபரப்பு நிலவியது.

சில பெற்றோர்கள், தங்கள் பையன்களின் முதுகைப் பிடித்து, கல்லூரிப் பாதைக்குள் நுழைக்கவும் முயற்சி செய்தார்கள். மாணவர்களின் பெற்றோரிடம் இருக்கும் பாசத்தைக் காட்டுவதற்காக, போலீஸாரும், அவர்களுக்கு ஒத்தாசை செய்வது போல், கல்லூரிக் கதவுகளின் இடைவெளிகளை மூன்றடியாக்கினார்கள். சில பையன்கள், பெற்றோருக்குப் பயந்து உள்ளே போய்விட்டு, பிறகு காம்பவுண்ட் சுவரில் ஏறி, கீழே குதித்து, தங்களை மாணவர் கூட்டத்தில் மறைத்துக் கொண்டார்கள். ஒரு பயலும் இன்னும் சின்னக் கல்லைக் கூட எறியலி யே என்பது போல், கல்லூரிக்குள் டிரஸ்டிகள் ஏங்கித் தவம்.கிடந்தனர். எந்த நேரத்தில், என்ன நடக்குமோ என்ற பரபரப்பு: மாணவர்கள் கோஷங்கள் வலுத்தன. வண்டி வாகனங்கள் ஸ்தம்பிக்கப் போவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/14&oldid=558616" இலிருந்து மீள்விக்கப்பட்டது