பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 128

வைங்க. டச் பண்றோம். இந்த சினிமா நடிகர், நடிகைகளோட கதைகளையும், கட்டுரைகளையும், ஏச்சுகளையும், பேச்சுகளையும் எழுதுவதே எங்களை மாதிரி கோஷ்டிங்கதானே.”

"தேங்யூ எங்க அளிஸ்டெண்ட் கமிஷனரை கொஞ்சம் ஹைலட் பண்ணனும்."

"இந்தப் பத்திரிகைக்கு. நீங்கதான் கெளரவ ஆசிரியர் மாதிரி. எங்கிட்ட நீங்க கேட்க வேண்டியதே இல்ல. ஒரு போன் போட்டால், எழுதுனதை பொறுக்கிறதுக்கு ஓடி வருவோம்."

"அப்போ நாளைக்கே எங்க ஏஸிய பேட்டி காண்றிங்களா?

"பேட்டியா? இன்னும் ஒரு மாசம் போகட்டும். எங்க பாஸ் ஒரே கவலையா இருக்கார். அவர் செட்டில் ஆகட்டும்."

"என்ன கவல?

"எல்லாம் இந்த பெருமாள்சாமி விவகாரந்தான். கோர்ட்டுக்குப் போயிருக்கான். போன வாரம். தி.க வீரமணி அவதூறு வழக்குல, ஒரு பத்திரிகாசிரியருக்கு ஒரு வருட ஜெயில் தண்டனை தீர்ப்பாச்சு பாருங்க. அதைப் படிச்சதுல இருந்து எங்க எம்.டி. ஒரு மாதிரி ஆயிட்டார். அதனால்தான் சொல்றேன். இந்த விவகாரம் முடியட்டும். அப்புறம் நீங்க எழுதுவதுதான் எழுத்து."

இன்ஸ்பெக்டர், வாடிக்கையாளர்களைப் பார்த்து முகமாட்டினார். ஏஸியோட பேட்டி இப்போ வராதோ? மிஸ்ஸஸோட கதையை இப்போ வெளியிட முடியாதோ? ஏற்கெனவே அவள் நச்சரிக்காள். கோப்மாய் இருக்கிற ஏ.ஸி.யை எதிர்பாராமல் கிடைத்த இந்த பத்திரிகையில் போட்டு குளிப்பாட்டலாமுன்னு நினைச்சேன். இன்ஸ்பெக்டர், கன்னையாவை பார்த்து முறைத்தார். பிறகு, அவர் சட்டைக் காலரை பிடித்திழுத்து, தன் பக்கம் திருப்பினார். "யோவ் உன்னத்தான், ஒன் பேரு என்ன?

"கன்னையாங்க.."

"கன்னையாவோ. பொன்னையாவோ. நான் சொல்றதை நல்லா கேளு என்கிட்ட டாய்க்கலாமுன்னு மட்டும் நினைக்காதே. இவங்க என்ன செய்யச் சொல்றாங்களோ, அதை மரியாதையாய் செய்திடு. அப்போதான் ஒனக்கும் நல்லது, ஒன் பொண்ணுக்கும் நல்லது:

"மிஸ்டர். ஒங்களத்தான், ஒங்க எம்.டி.யை. இவனுக்கும், ஏதாவது கொடுக்கச் சொல்லுங்க. எம்டியாய் விடாதீங்க.."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/140&oldid=558748" இலிருந்து மீள்விக்கப்பட்டது