பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 * சத்திய ஆவேசம்

இன்ஸ்பெக்டரின் வார்த்தை விளையாட்டை பார்த்துவிட்டு வேடிக்கையண்கள் சிரித்தார்கள். பிறகு, முத்தவன் வழிமொழிந்தான். "அது இல்லாமலா? செக்கும், பேனாவும் தயாராய் இருக்கு லைார்."

கன்னையா, மயங்கி மயங்கி மருவினார். அடேய் அறிவு கெட்டவனே சின்ன வயசுலயே செத்துப் போன என் மகன் மட்டும் இப்போ உயிரோட இருந்தால், இந்நேரம், உன்னைவிட வயசுலயும், மூளையிலயும், உத்தியோகத்துலயும் பெரியவனாய் இருப்பான். ஒன் அப்பன் வயசான என்னைப் பார்த்தாடா, இவன் அவன்னு பேசுறே? ஒனக்குப் பணம் வேணுமுன்னால், நேரடியாய் இந்தப் பசங்ககிட்டே கேளேண்டா. என்னை ஏண்டா இழுக்கிறே.

கன்னையாவால், இன்ஸ்பெக்டரை மனதுக்குள்தான் திட்ட முடிந்தது.

கன்னையா, காருக்குள் இருந்தவர்களைப் பார்க்க விரும்பாதது மாதிரி, கண்களை மூடினார். அவர்கள் பேசுவதைக் கேட்க விரும்பாதவர்போல், கரங்களிரண்டையும் மடித்து, அவற்றை காதோரம் கொண்டு போனர். கார் ஒடுவது தெரியாமல் ஒடிக் கொண்டிருந்தது. அலுங்காமல், குலுங்காமல், ஆகாயக் கப்பலாய் மிதப்பில் சென்றது. ஏதோ ஒர் இடத்தில் நின்றபோதுதான், கன்னையா கண்களைத் திறந்தார். இன்ஸ்பெக்டர் காரில் இருந்து இறங்கினார்.

தேங்க்யூ. இன்ஸ்பெக்டர் ஸார் இந்த ஆளுக்கு இன்னும் கொஞ்சம் அட்வைஸ் கொடுங்கோ."

"இந்த ஆள் வம்பு பண்ண மாட்டான். யோவ் கன்னையா. சொன்னது ஞாபகம் இருக்கட்டும். அப்புறம். அந்தப் பெருமாள் சாமியோட அட்ரஸை கொடுங்க. ஏரியா போலீஸ்ல சொல்லி ஒரு வழிபண்ணச் சொல்றேன்."

"நோ. தேங்க்யூ ஸார். இப்போதைக்கு ஏதாவது செய்தால் கோர்ட்ல அவன் வக்கீல் வம்பு பண்ணுவான்."

"நாங்க நேரடியாய் மோதமாட்டோமே." "இப்போ வேண்டாம் அந்த ஆளுக்கு வேறவழி வச்சிருக்கோம்'வாடிக்கை'யின் சீனியர் நிருபன், பேசி முடித்துவிட்டு சிரித்தான். தலைகவிழ்ந்து போன கன்னையாவை மோவாயால் சுட்டிக் காட்டினான். இன்ஸ்பெக்டர் புன்னகைத்தார். பிறகு விருந்தோம்பல் வார்த்தைகளை விட்டார்.

"ஸ்டேஷனுக்கு வாங்களேன், டீ சாப்பிட்டுப் போகலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/141&oldid=558749" இலிருந்து மீள்விக்கப்பட்டது