பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 132

கொடுத்து வைத்த கன்னையா, நிருபர்கள் புடைசூழ, இரண்டாவது மாடிக்கு வந்தார். நிருபர்கள் காவலாளியிடம் கண் காட்டியதும், கதவு விரிந்தது. கன்னையர், அந்த அறைக்குள் கால் வைக்கவே அஞ்சினார். துப்பறியும் கதைகளில் வர்ணிக்கப்படும் ரத்தம்போல், செக்கச் சிவந்த கம்பள விரிப்பு: இடதுபக்கம் சங்கராச்சாரியாரின் மிகப்பெரிய புகைப்படம். அதற்கு எதிர்ப்பக்கம், எழிலோங்கிய பெண்களின் திரையோவியங்கள்.

எம்டியும், எடிட்டருமான அந்த ஒற்றை மனிதர், கன்னையாவைப் பார்த்ததும், தன் நாற்காலியில் இருந்து, அது ஒரு பொருட்டல்ல என்பது போல் உதறிப் போட்டு விட்டு எழுந்தார். "வாங்கோ கன்னையர் ஸார் வாங்கே. உழைப்பாளியான ஒங்க பாதம்பட்டு, எங்க பத்திரிகையே புனிதமாவுது வாங்கே, வாங்கோ என்றார். கன்யைாவுக்கு, ஆனந்தமான ஆச்சரியம். எவ்வளவு பெரிய மனுஷன், இவ்வளவு பெரிய வார்த்தைகளைப் பேசுறார்.

கன்னையா, தான் உட்காரும் முன்னால், அந்த மனிதர் உட்கார மாட்டார் என்பதைப் புரிந்து, அவ்வளவு பெரிய மனிதரை, எவ்வளவு சீக்கிரம் உட்கார வைக்க வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் அமர்த்திப் பார்க்க வேண்டும் என்று எண்ணி, எடிட்டரையே பார்த்தபடி, கால்களை விசைப்படுத்தினார். அவர் எதிரே போய் நின்றார். உடனே, எம்.டி. மேஜைக்கு அப்பாலும் உடம்பை வளைத்து, உட்காருங்கே என்றார். கன்னையாவிற்காக, நாற்காலியைக் கூட நகர்த்தப் போனார். அதைப் பார்த்துவிட்டு வேடிக்கை நிருபர்களில் ஜூனியர், கன்யைாவிற்காக, சரியாக இருந்த நாற்காலியை, தப்பும் தவறுமாக இழுத்துப் போட்டான். அவரை உட்காரும்படி, கண்களால் கெஞ்சினான். கன்னையா, திகைத்து, திக்குமுக்காடி உட்கார்ந்திருந்தார்.

வாடிக்கைப் பையன்கள், பயபக்தியோடு நிற்பதுபோல் பாவலா செய்தபோது, எம்.டி. அவர்களையும் உடகாரச் சொல்வது போல் தலையை ஆட்டினார்.

நிர்வாக இயக்குநர் வேலையையும், பத்திரிகைாசிரியர் வேலையையும், அவ்வவ்போது சில திரைப்பட வேலைகளையும், பாவம் தன்னந்தனியாய் கஷ்டப்பட்டுக் கவனிக்கும் அந்த ஒற்றை மனிதரையே, கன்னையா உற்றுப் பார்த்தார். கிராமத்தில், தனது பால்ய நண்பனின் முகம் தெரிந்தது. அவனுக்கும், உருண்டை உருண்டையாக உருட்டுகிற கண்கள்.

எம்.டி, கன்னையாவை, கருணை ததும்பப் பார்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/144&oldid=558752" இலிருந்து மீள்விக்கப்பட்டது