பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 * சத்திய ஆவேசம்

"சரி. கூலாய் சாப்புடுறிங்களா ஹாட்ாய் குடிக்கிறங்களா? ஏன் யோசிக்கிறங்க? நான் ஒங்களோட நண்பன். நீங்க என் விருந்தினர். மற்ற சமாச்சாரம் அப்புறம் அது ஒன்றும் பெரிசில்ல. உம். சொல்லுங்க” "சிங்கிள் டீ போதுங்க... முடியுமுன்னால் ஒரு ஆஸ்ப்ரோ மாத்திரையும் வேணும்."

கன்னையா, தன்னை கிண்டல் செய்கிறாரோ என்று எம்.டி. மேஜையின் பக்கவாட்டில் ஆளுக்கு ஒருவராய் இருந்த வாடிக்கையர்களைப் பார்த்தார். அதற்குள், கன்னையா விகற்பம் இல்லாமல், சுற்றுமுற்றும் குழந்தைத்தனமாய் பார்ப்பதைக் கவனித்த எம்.டி., அவருக்காக, சுதாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று முடிவுக்கு வந்தார். பிறகு வாடிக்கையன் ஒருவனைப் பார்த்து கண்ணடித்தார். உடனே அவன் பைக்குள் இருநத டேப் ரிக்கார்டரை எடுத்து, யதேச்சையாகப் பார்ப்பவன்போல் அதை இயக்கினான். எம்.டி. பெரிய பீடிகையோடு பேச்சைத் துவக்கினார்.

"ஒங்களைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும், கன்னையா ஸார் பத்துப் பதினைந்து வருஷமாய் ஒரு ஸ்கூட்டர் மெக்கானிக் ஷாப்ல, பாட்னராய் இருந்திங்க. பங்காளி பந்தாடிட்டான். அப்புறம் அம்பத்துர்ல் இரண்டு வருஷத்துக்கு முன்னால, அந்தக் கம்பெனில பிட்டராய் ஜாயின் பண்ணுனிங்க. பேக்டரில ஒங்களுக்கு நல்லபேரு. நேர்மையைத் தவிர, வேறு எதுவுமே தெரியாத மனுஷர். ஒங்க டாட்டர் வசந்தியும், பத்தரை மாற்றுத் தங்மின்னால் தங்கம். எப்படிடா இவருக்கு இவ்வளவும் தெரிஞ்சு துன்னு நினைக்கிங்களா? எங்கெல்லாம் யோக்கியங்க இருக்காங்களோ அவங்களைப் பற்றி தெரிஞ்சுக்கிறதுக்குன்னே, ஆபீஸ்ல ஒரு செல் வச்சிருக்கேன். இப்படிப்பட்ட ஒரு உத்தமரோட மகள், உத்தமியை ஒரு உன்மத்தன் தவறாய் பார்த்தான். கையைக் காலை பிடிச்சான்னு கேள்விப்பட்டு நான் எப்டி துடிச்சுட்டேன் தெரியுமா? இந்த விஷயத்தை விடக்கூடாது கன்னையா ஸார். நீங்க விட்டாலும், நான் விடப் போறதாய் இல்ல ஸார். என்னென்ன உதவி வேணுமோ கேளுங்க, செய்யக் கடமைப் பட்டிருக்கேன்."

கன்னையா, எம்.டி.யை பாசத்தோடு பார்த்தார். பாவம். எவனோ ஒரு காலிப்பயல் சொன்னதை நிசமுன்னு நம்பி துடிக்கிறார். இவரோட படப்படப்பைப் போக்க வேண்டியது என்னோட கடமை. மெல்ல மெல்ல, கன்னையா வாய் திறந்தார்.

"அப்படி ஒன்று நடந்திருந்தால், பெருமாள்சாமியை, நானே கத்தியால் குத்திக் குதறியிருப்பேங்க. என் மகள் கிட்டே கேட்டேன். அந்த மனுஷர் இவளை பெற்ற மகளை நடத்துனது மாதிரி நடத்துனாராம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/145&oldid=558753" இலிருந்து மீள்விக்கப்பட்டது