பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 134

எம்.டி. நிமிர்ந்து உட்கார்ந்தார். கன்னையாவை இஷ்டப்படி ஆட்டிப் படைக்க ஏற்பாடு செய்ததாய் சற்று நேரத்திற்கு முன்பு, தன் காதில் ஒதிய வாடிக்கையனை, உதிய மரத்தைப் பார்ப்பதுபோல பார்த்தார். ஆனாலும், ஏமாற்றத்தை வெளிக்குக் காட்டாமால், இனிப்பு இனிப்பாய்க் கேட்டார். -

"ஒரு வேளை. ஒங்க மகள், நீங்க மானஸ்தர். உண்மை தெரிஞ்சால் விபரீதமாய் போயிடுமுன்னு விவகாரத்தை முடி மறைச்சிருக்கலாம் இல்லியா?

"என் பொண்ணு அப்படிப்பட்டவள் இல்லங்க. பேசாமல்தான் இருப்பாள். ஆனால் விவகாரமுன்னு வந்துட்டால், நீங்கன்னாக் கூட விடமாட்டாள். வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுதாங்க."

"நீங்க பொய் சொல்றிங்களா? ஒங்க பொண்ணு பொய் சொல்லுதான்னு தெரியல."

"எனக்கும் அப்படித்தாங்க. நீங்க பொய் சொல்றிங்களா. இதோ இவங்க ஒங்களை அப்படி நம்ப வச்சுட்டடாங்களான்னு தெரியல." எம்.டி, எக்கச்சக்கமாகத் தவித்தார். ஆனாலும் நிதானத்தை இழக்கவில்லை.

"பிறகு, எதுக்காக ஒங்க பொண்ணு, பெருமாள்சாமி, தன்கிட்ட தகாது நடந்ததாய் கம்ப்ளெயின்ட் செய்தாள்?

"அப்படி ஒண்னும் அவள் கொடுக்கலிங்க." "இதோ போட்டோ ஸ்டேட் காபி. நல்லா பாருங்க. இதோ அதோட கையெழுத்து."

"ஆகாயத்துல மனுஷன் நடக்கிற காலத்துல, இந்த ஜோடனை பெரிசா."

"சொன்னதையே நீங்க சொல்லப்படாது. நெருப்பில்லாமல் புகையாது.”

'ஒத்துக்கிறேன். ஆனால், நெருப்பு வச்சவனை கண்டு பிடிக்கிறதுக்குப் பதிலாய், என் பொண்ண நெருப்புல தள்ளிடாதிங்க”

எம்.டி.யின் கண்கள், யாசித்தன. குரல் குழைந்தது.

"இந்தா பாருங்க கன்னையா ஸார்: பெருமாள் சாமிக்கும், ஒங்க பொண்ணுக்கும் இடையே ஏதோ நடந்திருக்கு, ஒங்க பொண்ணும் ஒழுக்கத்தை உயிராய் நினைச்சதால, எடுத்த எடுப்பிலேயே புகார் பண்ணிட்டு. இப்போ கோர்ட் விவகாரமுன்னு வந்துட்டதால, அவளோட எதிர்காலம் பாதிக்கப்படுமேன்னு பயப்படுறீங்க.."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/146&oldid=558754" இலிருந்து மீள்விக்கப்பட்டது