பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 * சத்திய ஆவேசம்

"எங்களை மாதிரி ஏழைங்களுக்கு எல்லாக் காலமும் ஒரே காலந்தான். எதிர்காலமுன்னு தனியாய் எதுவும் கிடையாது. அவளுக்குன்னு இனிமேலா ஒருவன் பிறக்கப் போறான்? சினிமாவுலயும் நாடகத்துலயும் பொண்ணுங்க அவிழ்த்துப் போட்டுட்டு ஆடுற இந்தக் காலத்துல, ஒரு பொண்ணு கோர்ட்டுக்கு போறதில் தப்பில்ல. ஆனால் நடக்காததை நடந்ததாய் எப்டிங்க சொல்றது?

இடையே, தேநீர் கோப்பை வந்தது அதை ஒருபுறமாய் தள்ளி வைத்துவிட்டு, கன்னையா தொடர்ந்தார்.

"எழுதறுதுக்கு முன்னால என்கிட்டயோ, என் பெண்ணுகிட்டயோ ஒரு வார்த்தை கேட்டீங்களா? ஒங்களுக்கு ஏழைப் பொண்ணான. என் மகள்தானா கிடைச்சாள்? எத்தனைப் பொம்புளைங்க உடம்பைக் காட்டி, மூளையில மேதைத்தனம் இருக்கதாய் நடிக்கிறாள். அதெல்லாம் ஒங்க பார்வைக்குப் பட்டுதா? ஒங்களால என் வீட்டுக்காரியோட ஆஸ்த்மா அதிகமாயிட்டு. பெண்ணு அரைப் பைத்தியமாயிட்டாள். இது போதாதுன்னு, ஒங்க பசங்க போலீஸை வச்சு மிரட்டி, என்னைக் இங்கே கொண்டு வந்திருக்காங்க இவ்வளவுக்கும் நான் வம்புதும்புக்குப் போகதவன். கம்பெனியில் வேலை நிறுத்தம் நடக்கும்போதுகூட,

வாங்குனவன். எந்தத் தொழிற்சங்கத்துலயும் மெம்பராய் இல்லாதவ்ன. எனக்கு என் குடும்பத்தைத் தவிர, வேறு உலகம் கிடையாது. தயவு செய்து எங்களை வாழ விடுங்க சாமி. ஒங்க பொண்ணாய் இருந்தால் இப்டி பேசுவிங்களா?

எம்.டி.க்கு, கன்னையாவின் பேச்சைக் கேட்க, ஒரு பக்கம் எரிச்சல். இன்னொரு பக்கம் இதம். ஒரு தொழிலாளியை மிரட்டப்போய், அதனால் எல்லாத் தொழிலாளிகளும், ஒன்று திரண்டு எக்கச்சக்கமாய் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்று முதலில் பயந்த அவருக்கு, கன்னையா சொன்ன சுய தகவல்கள் சுதந்திரத்தைக் கொடுத்தன. இவன், தனித்த தொழிலாளி. வீட்டையே உலகமாய் கொண்டவன். ரெண்டுல ஒன்றைப் பார்த்திடலாம்.

எம்.டி, டேப்பனை அர்த்தத்தோட பார்க்க, அவன் ரிக்கார்டரை, 'ஆப்' செய்தான். உடனே அவர் எழுந்து, கன்னையாவின் தோளில் கைபோட்டு, அவரை உட்கார வைத்தபடியே, ஆப்படிப்பது போல், பேசினார்.

"ஒட்காருங்க கன்னையா ஸ்ார். நேரமாகுதுன்னு யோசிக்கத் தேவையில்லை. ஒங்களை வீட்ல கார்லயே விடச் சொல்றேன். இப்போ பிராக்டிக்கலாய் பேசுவோம் பெருமாள்சாமி, வழக்குப் போட்டிருக்கான். நாங்க எழுதுனது மாதிரி நடந்துதோ நடக்கலியோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/147&oldid=558755" இலிருந்து மீள்விக்கப்பட்டது