பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 136

எழுதிட்டோம். இப்போ இந்த இன்ஸ்டிடுசன் பேரைக் காப்பாற்றியாகணும். அதனால்தான் சொல்றேன்; ஒங்க ஜெனரல் மானேஜர் என்னோட பெஸ்ட் பிரண்ட். அவர்கிட்ட சொல்லி ஒங்களுக்கு அந்தக் கம்பெனில பொறுப்பான வேலையை வாங்கித் தாறேன். ஒங்க பொண்ணு அந்த உருப்படாத காலேஜ்ல வேலை பார்த்து கஷ்டப்பட்டது போதும். நானே, என் கம்பெனில நல்ல வேலையாய் கொடுக்கேன். ஒங்க மனைவியை நர்ஸிங்ஹோமுல சேர்க்கேன். ஒங்களுக்கு பத்தாயிரம் ருபாய் தாரேன். நீங்க ஒரே ஒரு சின்ன உதவி செய்தால் போதும், ஒங்க மகள் இந்த போட்டோ ஸ்டேட்ல இருக்கது மாதிரி ஒரு லட்டரை எழுதித் தந்தால் போதும். கோர்ட்டுக்கு, அவள வரவேண்டாம். நாங்க ஒரு அப்பிடவிட் பைல் செய்தால் போதும் என்ன சொல்றீங்க? இதோ செக்புக். இதோ ஒங்க ஜி.எம். மோட பேசுறதுக்கு டெலிபோன். என் பிரச்சனை புரியுதா?

"புரியுதுங்க, ஒங்களுக்கு இது பொழுதுபோக்குப் பிரச்சனை: எங்களுக்கு உயிரே போகிற பிரச்சனை. நான் வரட்டுமா?

"இருப்பதாயிரம் ருபாய் தாரேன் ஸ்ார்."

"மன்னிச்சிருங்க."

"முப்பதாயிரம் ரூபாய் தாரேன் கன்னையா ஸார்."

"என்கிட்ட பணம் இருந்திருந்தால், நானும் உங்க பெண்டு பிள்ளைகளை ஒரு வேளை இதைவிட மோசமான பேரத்துக்குக் கேட்டாலும் கேட்டிருப்பேன். ஆண்டவன் புண்ணியத்துல, எங்கிட்ட பணம் இல்ல. இருந்தாலும், அப்படிக் கேட்கமாட்டேனே நினைக்கேன். ஏன்னா, நீங்க என் பெண்ண ஓங்க பெண்ணு மாதிரி நினைக்காட்டியும், நான் ஒங்க பொண்ணுகளையும், என் மகள்களா நினைக்கிற டைப்... எருதுக்கு நோவாம், காக்கைக்கு கொண்டாட்டமாம் எங்களை ஏற்கெனவே கொத்திக் குதறிட்டிங்க அக்கம் பக்கம் தலைகாட்ட முடியல. ஒங்களுக்கு கோடிப்புண்ணியம் எங்களை புண்ணோடயாவது விட்டுங்க அய்யா."

எம்.டி., ஏதோ பேசப்போனபோது, அறைக் கதவு, திறந்து திறந்து மூடப்பட்டது. கன்னையாவைத் தவிர, எல்லோரும் கதவையே பார்த்தபோது செயலாளர் அறையில் இருந்த அதே அந்த சாதாரணப் பெண் உள்ளே பாய்ந்தாள். முப்பது வயதிருக்கலாம். கருவாடு உடம்பு வட்டமுகம்; சுருட்டைத்தலை; வெள்ளைநிறம், மார்பகம் தெரியாத நெஞ்சு. ஒரு பல் ஒட்டை அவளைப் பார்த்த ஜூனியர் நிருபன், கோபமாகக் கையாட்டினான். எம்டி, அவனைக் கையமர்த்திவிட்டு, தாவிய கோபத்திற்கு தடைபோட்டபடி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/148&oldid=558756" இலிருந்து மீள்விக்கப்பட்டது