பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 * சத்திய ஆவேசம்

"வாங்கோம்மா, வாங்கோ" என்றார். அவள் பொம்மை மாதிரி வந்து நின்றாள். எம்.டி. அவளைச் சுட்டிக் காட்டியபடியே, கன்னையாவிடம் பேசினார்.

"இவங்களும். ஒங்களை மாதிரி பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி சார். போன வருஷம், தம்பியை காலேஜில சேர்க்கிறதுக்காக, இந்தம்மா காலேஜ்ல போய் பெருமாள் சாமியைப் பார்திருக்காங்க. அந்த அயோக்கியன், ஒங்க பொண்ணு கிட்ட வம்பு செய்தது மாதிரி, இந்த அம்மா கிட்டேயும் வாலாட்டி இருக்கிறான். இவங்க அல்றியடிச்சு வெளில ஒடி வந்துட்டாங்க. தம்பியோட படிப்புப் போனாலும் பரவாயில்ல, தன்னோட மானம் போயிடப்படாதுன்னு பயந்துட்டாங்க. அப்புறம் அந்த காலேஜ் பக்கமே போகல. நம்ம பத்திரிகையில அந்த செய்தி வந்தபிறகு தான், இவங்க என்னைப் பார்த்து நடந்ததைச் சொன்னாங்க. இப்போ கோர்ட்டுக்கும். சாட்சியா வாராங்க. இந்தத் துணிச்சலை நான் பாராட்டுறேன். பெண்கள் பெட்டிப் பாம்பாய் அடங்கியிருந்த காலம் மாறிட்டுன்னு நிரூபிக்கப் போற இந்த அம்மாவுக்கு, தலை வணங்குகிறேன். இது தேவை ஸார். ஒரு அயோக்கியனையாவது இப்படி எக்ஸ்போஸ் செய்தால், எல்லா அயோக்கியங்களுக்கும் அது, பாடமாய் இருக்கும். இந்தத் துணிச்சல் ஒங்களுக்கு இல்லையே. தேங்க்யூ மேடம் நீங்க நாளைக்கு வந்து என்னைப் பாருங்க”

"ஒங்களை பார்க்க விடமாட்டேன் எங்கிறாங்க சார்."

"எவன் சொன்னான்? வேலையைக் காலி பண்ணிடுவேன் காலி. அப்போ போயிட்டு நாளைக்கு வாறிங்களா?

அந்தப் பெண், மயங்கியபடியே நின்று, தயங்கிய படியே போய்விட்டாள். எம்.டி. கன்னையா மேல் கண் வைத்து, வாய் மேல் சொல் வைத்தார்.

"அப்புறம் ஒங்க முடிவுதான் என்ன?"

"உண்மையை ஒரு தடவை சொன்னால் போதும் சார்."

"ஒங்க பொண்ணு பெருமாள்சாமியோட கள்ள நட்பு வச்சிருந்தாள். ஒருநாள் சல்லாபம் நடந்ததை ஒருத்தன் பார்த்துட்டான். அதனால் பயந்து கம்ப்ளெயிண்ட் கொடுத்தாள். இப்போ பெருசாம்சாமி கிட்ட, அவள் எழுதுன காதல் கடிதங்கள் இருக்கதால பயப்படுறாள்னு எங்க துப்பறியும் படை மூலம் ஒரு கட்டுரை எழுத எனக்கு அதிக நேரம் ஆகாது சார் என்னால ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். இப்போ என் பேச்சைக் கேட்காட்டால், அப்புறம் நீங்கதான் வருத்தப்படுவீங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/149&oldid=558757" இலிருந்து மீள்விக்கப்பட்டது