பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 * சத்திய ஆவேசம்

போன்ற நிலைமை போலீஸாரின் உடம்பை எறும்பு கடித்தது போல், அங்குமிங்குமாக நடக்கும் அணியலங்கார நடைகள். ஏதோ நடக்கும் என்று எதிர்பார்த்து, பக்கத்து சில்லறைக் கடைகளும், எதிர்ப்புரத்து சிற்றுண்டி விடுதிகளும் கதவுகளை முடி முடி, மாரடிக்கும் ஒத்திகைகள். மாணவர்கள் முழக்கம் வலுத்தது. அவர்கள் கையை ஆட்டுவதும், ஆவேசமாக நடமாடுவதும் அதிகரித்தது. இதனால் போலீஸார் பரபரக்க, போலீஸ் பரபரப்பால், மாணவர் பரபரக்க, ஒன்று இன்னொன்றை அதிகப்படுத்திக் கொண்டிருந்த நேரம்; கல்லூரி டிரஸ்டிகளின் கனவு, நனவாகப் போவது போன்ற சமயம்.

முத்தையா, நிலைமையைப் புரிந்து கொண்டான். ஒரு மாணவத் தோழனின் தோளை, ஆதரவாகப் பற்றியபடி, கல்லூரிக் காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்றபடி, "என் மாணவ நண்பர்களே' என்று பேசப்போனான். என் என்ற வார்த்தை உச்சரிப்பில், தன்னை இழந்த தொனி ஒலித்தது. பிரபஞ்சத்தில், அங்குமிங்குமாக இருக்கும் அத்தனை பாச வெளிப்பாடுகளும், எழுகடல் புகுத்திய கடுகுபோல், அவன் குரலில் ஒலித்தது. மாணவர்களை கையமர்த்திய படியே, கூட்டத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்தான். அவன் கண்கள் மாணவ எல்லையைத் தொட்டு, போலீஸ் தடுப்புச் சுவரைத் தாண்டி, இன்னொரு இடத்தைப் பார்த்தது. அங்கே கிழிந்த துண்டோடு, கரியப்பிய வேட்டியோடு ஒரு வயதான உருவமும், அதனை ஒட்டினாற்போல், உருவத்தைக் கிழிசல்களாகவும், அதை ஒமூடிமறைக்கும் புடவையைச் சந்து பொந்துகளாகவும் கொண்ட இன்னொரு உருவத்தையும் பார்த்தான். அவன் கண் விழுந்ததை உணர்ந்த அந்த இரு உருவங்களும், தலைக்கு மேல் தத்தம் கரங்களைத் துக்கிக் கும்பிட்டன. முத்தையாவால், பெற்றோரை, அதற்கு மேல் பார்க்க முடியவில்லை. படுகளத்தில் ஒப்பாரி கூடாது என்ற பழமொழியை மனதில் சொல்லிக் கொண்டே பேசப்

போனான்.

பேச்சு வரவில்லை. தெற்கே அச்சரப்பாக்கம், வடக்கே பழவேற்காடு, மேற்கே நெல்லூர் ஆகிய மூன்று இடங்களை வியாபார எல்லையாக வைத்தபடி, கடை கடையாகச் சென்று கந்தல் கோணிகளை வாங்கி, பஸ்காரர்கள் கையில் காலில் விழுந்து, எப்படியோ அவற்றை ஏற்றி, பிராட்வேயிலோ அல்லது தங்கச்சாலையிலோ, தானே ஏற்றியதை தானே இறக்கி, தானே சுமந்து, வண்ணையம்பதி என்று எழுத்தாலும், வண்ணாரப் பேட்டை என்று பேச்சாலும் கூறப்படும் பகுதியில் உள்ள கோணிக் கடைகளில் விற்று அன்றாடப் பிழைப்பு நடத்தும் தன் தந்தையின் உருவம், அவனைப் பேசவிடாது, வாயை அடைத்தது.

கோணிக் கடையில், அப்போதுதான் கோணிகளை போட்டு விட்டு வந்திருப்பதை மெய்ப்பிப்பதுபோல், தந்தையின் தோளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/15&oldid=558618" இலிருந்து மீள்விக்கப்பட்டது