பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 138

கன்னையா, எம்.டி.யை எரித்துப் பார்த்தார். அவர் பற்கள் நறநறத்தன. எப்படியோ, கைகளை கட்டுப் படுத்தியபடி காறித் துப்பினார். மேஜைமேல் விழுந்த எச்சில், எம்.டி.மேலும், நிருபன்கள் மேலும் தெறித்தன. துப்பிய வாயைத் துடைக்காமலே, அவர் திரும்பினார். திரும்பிப் பாராமல் நடந்தார்.

எம்டி பேயறைந்தது போலானார். பார்த்தால் பசு மாதிரி தோன்றி, புலி மாதிரி பாய்ந்துவிட்டுப் போகும். அந்தத் தொழிலாளியையே, துவண்டு பார்த்தார். அவருக்கு, தனது இளைய சகாக்கள் மீது கோபம் கோபமாக வந்தது. எடிட்டரிடம் கேட்க வேண்டும் என்றுகூட தோன்றாமல், இவருக்கு தெரியாமலே பெருமாள்சாமியை பற்றி எழுதி கிழித்துவிட்டார்கள். இப்போது, இவர்தான் கிழிப்படுகிறார். இந்த பயலுக என்னடான்னா ஜாலியா திரிகிறார்கள்.

எம்டிக்கு, பெருமாள்சாமி மீதும், அதோ போகிற கன்னையா மீதும் கழிவிறக்கம் ஏற்பட்டது. ஆனாலும், மனத்தை தேற்றிக் கொண்டார். படுகளத்தில் ஒப்பாரி கூடாது... பிஸினசும், @i@మిaుఖఉG54మ ஜர்னலிலமும் ஒன்றாகும்போது, இதெல்லாம் சகஜம.

எம்.டி., சகஜ நிலைக்கு வந்தார். ஆனாலும், நிருபர்கள், எம்.டி.யை பயந்து பார்த்தார்கள்.

இதுவரை இவ்வளவு வீறாப்பாகப் பேசியறியாத தன்னால், எப்படி, இவ்வாறாக பேச முடிந்தது என்பதை வியந்தபடியே, கன்னையா பஸ் நிலையத்தை நோக்கி நடந்தார். பின்னால் 'ஸார்.ஸார் என்ற பெண்குரல் கேட்டது. நாம் எப்படி ஸாராக முடியும் என்று நினைத்தவர்போல், திரும்பிப் பாராமல் நடந்தார். ஆனால் குரல் கொடுத்தவள். அவர் முன்னால் வந்தாள். எம்.டி.கிட்டே வந்தாளே, அதே அவள், வந்ததும் வராததுமாய் படபடப்பாய் பேசினாள்.

"ஓங்ககிட்டே கொஞ்சம் பேசனுங்கோ. கோபால் பார்த்துடப் போறான். அடுத்த பஸ் ஸ்டாண்ட்ல போய் பேசலாம்."

கன்னையா, கத்தப்போனார். ஆனாலும், அவளைப் பார்க்க பாவமாகத் தோன்றியது. அவள் பின்னால் மெளனமாக நடந்தார். அவள் அவருடன் இணையாக நடந்தபோது, முன்னாலும், பின்னாலும் நகர்ந்து, தனியாய் நடந்தார். சாலையின் இடதுபக்கக் கிளைக்கு வந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/150&oldid=558758" இலிருந்து மீள்விக்கப்பட்டது