பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 * சத்திய ஆவேசம்

பஸ் நிலையம் வந்தார்கள். அவள், உடனே பரபரத்து, வந்த வழியைப் திரும்பத் திரும்பப் பார்த்தபடியே பேசினாள்.

"அய்யய்யோ கோபால் வந்துடுவானோன்னு எனக்குப் பயமாய் இருக்குதுங்கே."

"கோபால்னா யாரும்மா?

"கோபால் ஒங்களுக்குத் தெரியாதாங்கோ? அவரு.நடிப்பு தவிர எல்லாம் தெரிஞ்ச நாடக நடிகருங்கோ. அவரு பையன். கொஞ்ச நாளா வாடிக்கை பத்திரிகையில வேலை பார்க்காங்கோ."

"நீ யாரும்மா?"

"நாளா. நான் நாடக நடிகைங்கோ. அப்போ கோடம்பாக்கத்துல குடியிருந்தேன். இந்த கோபால். அதான் என்னை மாதிரி எக்ஸ்டரா நடிகைகள பலதுக்கும், பலாவானதுக்கும் கான்டிராக்ட் எடுக்கிறவன். கொஞ்ச நாளைக்கும் முன்னாடி இந்த ஆபீசிஸ்க்கு என்ன கூட்டி வந்தான். இங்க இருக்கிறவங்க சொன்னபடி, நான் கோர்ட்ல சாட்சி சொல்லணுமுன்னா பெருமாள்சாமின்னு யாரோ ஒருத்தனாம். அவன், என்ன கைய பிடிச்சான், கால பிடிச்சான்னு கோர்ட்ல சாட்சி சொல்லமுன்னு கூட்டி வந்தான். இதனால, எனக்கு இனிமேல் கஷ்ட நஷ்டம் வராததுன்னு வாக்களிச்சான். நீங்க பார்த்துட்டு வந்த முதலாளிகிட்டே கூட்டிப் போனான். அவரு, ஆயிரம் ருபாய் கொடுத்திட்டு இப்படி இப்படி கோர்ட்ல பேசணுமுன்னார். அதாவது, இந்த பெருமாள்சாமி பிரின்ஸ்பாலா இருக்கிற கலேஜ்ல, நான் என் தம்பிக்கு அட்மிஷன் வாங்க போனதாயும், அப்போ அந்த ஆசாமி, எங்கிட்ட தவறா நடந்துகிட்டதாயும், கோர்ட்ல சொல்லணுமுன்னாரு நானும் தலையாட்டுனேன். வெளியில வந்தா இந்த கோபாலு, பாதி பணத்தை புடுங்கிட்டான். தட்டி கேட்டால் வேற எக்ஸ்ட்ராவ செட்அப் செய்வானாம். இத சொல்லதான் முதலாளிகிட்டே வந்தேன். முதலாளி தங்கமான மனுஷன் ஸார். அதனால, எதுன்னாலும் முதலாளி கிட்டேயே நேரடியாய் வச்சுக்குங்க. நீங்க எவ்வளவுங்கோ வாங்குனிங்கோ?

கன்னையாவுக்கு, எல்லாம் புரிந்தது. அவளை, நேருக்கு நேராய் பார்த்தார். அவளோ, வெகுளித்தனமாய் ஒட்டைப்பல் தெரியும்படி அமங்கலமாய் சிரித்தாள். அனுதாபத்துடன் கேட்டார்.

"ஒன் தம்பியை காலேஜ்ல சேர்க்கப் போனியா?

"எனக்கு அம்மாவே யாருன்னு தெரியாது; அப்புறம் தம்பி எப்படி இருப்பான்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/151&oldid=558759" இலிருந்து மீள்விக்கப்பட்டது