பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னையா, அந்த தொழிற்சாலையில் தன்னை மறந்து வேலையில் அதி மும்முரமாக ஈடுபட்டார். சுற்றிலும் ராட்சத யந்திரங்கள் அசுரத்தனமாகச் சுழல, தொழிலாளர்கள் அவலத்தனமாக சுழன்று கொண்டிருந்தார்கள். டிராப்ட்ஸ்மேன் போட்டிருந்த செவ்வக வடிவத்திற்கு ஏற்ப, கன்னையா, சூடுபட்ட ஒரு இரும்புத் துண்டை குடைந்து கொண்டிருந்தார். திடீரென்று ஒர்க்ஸ் மானேஜரே அங்கு வந்தார்.

"யோவ் கன்னையா?

"சொல்லுங்க ஸார்."

"ஜி.எம். உடனே ஒன்னைப் பார்க்கச் சொன்னார்."

'எதுக்காம் ஸார்?

"எனக்கு எப்படிய்யா தெரியும்? என்னாலயே அவரைப் பார்க்க முடியாது. ஒன்னைக் கூப்புடுறது எதுக்குன்னு புரியல... நம்ம செக்ஷன் விவகாரத்தைக் கேட்டால், நல்லா சொல்லு என்னைப் பற்றித்தான் ஒனக்குத் தெரியுமே."

ஒர்க்ஸ் மானேஜர், கன்னையாவை, வி.ஐ.பி. மாதிரி பார்த்தார். கன்னையாவிற்கோ, ஒரே குழுப்பம். எப்படியோ, ஸ்பேனர்களை பத்திரமாக வைத்துவிட்டு, உடம்பிலும், உடையிலும் படிந்த தூள்களை கைக்குட்டையால் ஒட்டடை அடிப்பதுபோல் சுத்தி செய்துவிட்டு, ஒடினார். அவர், கைகள் தொங்கின. கால்கள் நடுங்கின. ஜி.எம். முன்னால் எப்படித்தான் பேசப் போறேனோ?

கம்பெனி செகரட்டரி, கன்னையாவைப் பார்த்து புன்னகை செய்துவிட்டு, இண்டர்காமில் பேசினார். பிறகு, ஜி.எம். இருந்த அறைக்கதவை, அவரே திறந்து விட்டார். கன்னையா, கசங்கிய ஆடைகளை இழுத்து விட்டு, சிதறிய முடியைக் கோதிவிட்டு, முகத்தைத் துடைத்தபடி, உள்ளே போனார். பெரிய அறை. எலெக்டிரானிக் சுவர்க் கடிகாரம். கலர் கலரான நான்கைந்து டெலிபோன்கள். இண்டர்காம் தேசிய உற்பத்திசபை கொடுத்த சான்றிதழ் கொண்ட கண்ணாடிப் பேழை ஒரு பக்கம். தொழிற்சாலையின் மாடலைக் கொண்ட ஒரு வரைபடம் இன்னொரு பக்கம். அவ்வளவு பெரிய அறையில், அவ்வளவு பெரிய நாற்காலியில் ஜி.எம். பெளவியமாக உட்கார்ந்திருந்தார். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது மாதிரியான கீச்சுக்குரல். மென்மையான தோற்றம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/153&oldid=558761" இலிருந்து மீள்விக்கப்பட்டது