பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 142

முன்னால் இருந்தவர்களை கவனித்த கன்னையா திடுக்கிட்டார். அவர்களோ, கன்னையா வருவது தெரியாமல் சிரிப்பும் கும்மாளமுமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். அவரைக் காரில் கடத்திச் சென்ற அதே அந்த வாடிக்கையன்கள். ஜி.எம் எனப்படும் ஜெனரல் மேனேஜர் அவர்களிடம் குழைவாகக் கேட்டார்.

"என் டாட்டரோட நடன அரங்கேற்றம் அடுத்த மாசம் நடக்கும். இன்னும் ஆடிட்டோரியம் பிக்ஸ் பண்ணல." வாடிக்கை சீனியர் விவரித்தான்:

எந்த ஆடிட்டோரியம் வேணும்? சொல்லுங்க சபாக்காரங்கல்லொம் எங்களுக்காகத் தவம் இருக்காங்க. நாங்க பிக்ஸ் பண்ணித் தாறோம். ஒங்க டாட்டர் அரங்கேற்றத்தை கவர் ஸ்டோரியாவே செய்திடுறோம். எத்தனையோ கழுதைங்களுக்கு, எவ்வளவோ பப்ளிசிட்டி கொடுத்திருக்கோம் ஒங்க டாட்டருக்கு கொடுக்க மாட்டோமா?

"தேங்க் யூ. அப்புறம் எங்க எம்.டி.யை கொஞ்சம் ஹைலட் செய்யனும் இந்த பேக்டரிக்கே அவர்தான் மூவிங் ஸ்பிரிட்"

"எங்க பத்திரிகையோட பக்கங்கள், ஒங்களுக்காக கம்போஸ் ஆகாமலே இருக்கும். பட், இன்னும் ஒரு மாசம் ஆகட்டும். எங்க எம்.டி, இந்த பெருமாள்சாமி விவகாரத்தால டிஸ்டர்ப்டாய் இருக்கார்."

ஏமாற்றத்தாலும், அதே சமயம் எதிர்கால எதிர்பார்ப்பாலும் தலைநிமிர்ந்த ஜி.எம், தன்னையே பார்த்தபடி, யாசகம் கேட்பதுபோல் கரங்களை குலுக்கியபடி நின்ற கன்னையாவைப் பார்த்துவிட்டு யெஸ் என்று இழுத்தார்.

"அய்யா. என்னை பார்க்கச் சொன்னதாய்."

"ஒங்க பேரு?

"கன்னையாங்க. பேக்டரில ஸ்டிரைக் நடக்கிறப்போ, நான் வேலைக்கு வந்ததுக்காக அய்யா என் முதுகில தட்டிக்கூட கொடுத்திங்க."

"அது கிடக்கட்டும். ஒங்க டாட்டர் ஏதோ கம்ப்ளெயிண்ட் கொடுத்துதாம். அப்புறம் வாபஸ் வாங்கிட்டுதாம். என்ன இதெல்லாம்?"

"நேத்தே இவங்ககிட்டே."

"எனக்கு ராமாயணம் கேட்க இப்போ நேரமில்ல. இவங்க சொல்றது மாதிரி ஒங்க டாட்டரை எழுதிக் கொடுக்கச் சொல்லுங்க. வேலை நிறுத்த போராட்டம் சமயத்துல ஒங்க முதுகிலதான் தட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/154&oldid=558762" இலிருந்து மீள்விக்கப்பட்டது