பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

  • சு.சமுத்திரம்

ஒண்ணும் கிடைக்காது. இந்த பேக்டரில கிடைச்சதை, உடம்புக்குள்ளே எடுத்துட்டுப் போறேன். நெஞ்சிலே சோதனைப் போட்டால் எவ்வளவோ கிடைக்கும்பா. என்று முணுமுணுத்தார்.

கன்னையா, வீட்டுக்குள் நுழையும் முன்பே, அவர் மனைவி அவர் கையைப் பிடித்தபடி விம்மினாள். கதவின்மேல் தலையை சாய்த்தபடி, வசந்தி கண்கலங்க நின்றாள். கன்னையா, மனைவியை வினாக்குறியோடு பார்த்தபோது அந்த அம்மா, அழுதழுது சொன்னாள்.

"அப்பாவு, இவளுக்கு முனுநாள் டயம் கொடுத்திருக்கிறாராம். சொன்னபடி எழுதிக் கொடுக்காட்டால், இவளோட கற்புக்கு அவர் பொறுப்பில்லையாம். இது பேதாதுன்னு, காலையிலேயே, ஒரு போலீஸ்காரன் வந்து மிரட்டுறான். கன்னையா, இன்னைக்கு வந்து, இன்ஸ்பெக்டரைப் பார்க்காவிட்டால், அப்புறம் எப்பவுமே பார்க்க வேண்டியது இருக்காதுன்னு திட்டிட்டுப் போறான். என் தலையே வெடிச்சிடும்போல இருக்கு. ஒரே சமயத்தில் எத்தனை பேரோட பகை? எனக்கென்னமோ பேசாமல், அந்த அப்பாவுப் பாவி சொல்றது மாதிரி இவளை எழுதிக் கொடுத்துடச் சொல்லிடலாமுன்னு தோணுது. வேற வழி இல்ல."

கோவிந்தம்மாள், நாதியற்றவள்போல் புலம்பினாள்.

கோர்ட்டிற்குப் போக நேரமாகிவிட்டது.

பேராசிரியர். பெருமாள்சாமி, பின்னறையில் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த கயிற்றுக் கொடியை கீழ்நோக்கி இழுத்த பேண்டை, மேல்நோக்கி இழுத்தார். இரட்டைக் குழல் துப்பாக்கி போல், இருந்த அந்த உடைக்குள், கால்களை விட்டு, அதை இடுப்பில் பூட்டினார். சிறிது நேரம் எதையோ யோசிப்பவர்போல், பரபரத்துப் பார்த்தார். பின்னர் கட்டில் விளிம்பில் கிடந்த சட்டையை எடுப்பதற்காக, வேகவேகமாய் நடந்தார். நடந்தவரின் கால்கள், பின்னின. பேராசிரியர், இடுப்புக்குக் கீழே போய், வயிற்றை விட்டு நழுவப்போன பேண்டின் மேல் விளிம்பை ஒரு கையால் தூக்கிப் பிடித்தார். அந்த ஊதா நிற பேண்டை ஆச்சரியமாகப் பார்த்தார். முன்பு இதே இந்த ஆடையை, அவர் போடும்போது, அது முட்டிகளில் சிக்கி தொடைகளை உராய்ந்து வயிற்றுக்கு வரும்போது, பிரசவ வலிபோல், வாதை கொடுக்கும். அப்படிப்பட்ட துணி, இப்போ எப்படிப் போய்விட்டது: பெல்ட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/156&oldid=558764" இலிருந்து மீள்விக்கப்பட்டது